பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 173

முடியும்?’ன்னு சொன்ன பிறகுதான் கூட்டம் வழி விட்டுது. அம்மா எல்லாரும் பஜனை படத்துக்குப் பின்புறமா உள்ளே நுழைஞ்சாங்க’ என்று முடித்தான் நாகசாமி.

இதையெல்லாம் கேட்டதும் பாகவதர் நிமிர்ந்து

உட்கார்ந்தார். கலெக்டர் வந்து கச்சேரி ஆரம்பிப்ப தற்குள் நான் அங்கே போய் விட வேண்டும். நேரிலேயே ஹரியின் கச்சேரியைக் கேட்க வேண்டும்; அவனுடைய

கச்சேரியைப் பற்றி வேறு யாருடைய அபிப்பிராயமும் வேண்டாம்’ என்ற முடிவுக்கு அவர் மனம் வந்துவிட்டது. சட்டென்று, நாகசாமி, நீ எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டுமே’ என்றார்.

• * 6&6 ?””

“என்னை எப்படியாவது நீ கச்சேரி நடக்கிற இடத்துக்கு அழைத்துப் போக வேண்டும்.’

என்ன எசமான்? இந்த உடம்போடியா?”

“பரவாயில்லை நாகசாமி. இன்று ஹரி பாடுவதை நான் கேட்காவிட்டால் என் பிராணன் இப்போது இங்கேயே போய்விடும். என்னை வண்டியிலே ஏற்றி உட்கார்த்திவிடு. செட்டி மண்டபத்துக்குப் பக்கமாக வண்டியைக் கொண்டு நிறுத்தினால் போதும். பாட்டு நன்றாகக் கேட்டும்; ஒரளவு மேடையும் தெரியும். ஊம், சீக்கிரம்! என்னை ஒரு கை பிடி. உனக்கு வேறு எங்கேயும் சவாரி போக வேண்டியதில்லையே? பணத்தைப் பற்றி யோசிக்காதே’ என்றார்.

“என்னங்க ஐயா, இப்படிப் பேசlங்க? சவாரியையும் பணத்தையும் பார்த்தா, நான் உங்க குடும்பத்திலே பழகிக் கிட்டிருக்கேன்? உங்களுக்கு உடம்பு சரியில்லையே, அழைச்சுப் போனா அம்மா ஏதாவது சொல்லுவாங்களே

அப்படீன்னுதான் சாமி யோசிக்கிறேன்’ என்று நாகசாமி கூறியபோதே பாகவதர் இடைமறித்தார்.