பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 74 புல்லின் இதழ்கள்

அதெல்லாம் ஒன்றும் வீணாக யோசிக்காதே. இப்படி என் பக்கம் வந்து ஒரு கை பிடி. கச்சேரியை ஆரம்பத்திலிருந்து எனக்குக் கேட்டாக வேண்டும்’ என்று துரிதப்படுத்தினார்.

அதற்கு மேலும் நாகசாமியால் மறுக்க முடியவில்லை. நாலைந்து தலையணைகளை எடுத்து வண்டியில் பரப்பினான். பாகவதரைப் பத்திரமாக வண்டியில் ஏற்றி உட்கார வைத்தான். வீட்டைப் பூட்டிச் சாவியை அவரிடம் கொடுத்தான். மறுகணம் ஜல் ஜல் என்று இரட்டை மாட்டு வண்டி செட்டி மண்டபத்தை நோக்கி ஒடியது.

பாகவதர் குறிப்பிட்ட இடத்தில், ஒரமாக நாகசாமி வண்டியைத் திருப்பி நிறுத்திக் கொண்டான். குழுமி யிருந்த ஜன சமுத்திரத்தையும், பஜனை மடத்தையும் வண்டியில் இருந்தபடியே பாகவதரால் பார்க்க முடிகிறது. மேடைமீது ஜகஜ்ஜோதியாக விளக்குகள் எரிந்து கொண் டிருக்கின்றன.

பாகவதர் வருவதற்கும் மேடை மீது இருந்த ராமர் படத்துக்கு ஹாரத்தி காட்டுவதற்கும் சரியாக இருந்தது. வண்டியில் இருந்தபடியே பாகவதர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

ஹரி சபையை மேலெழுந்த வாரியாக நோட்டம் விட்டான். மேடை மீது பஜனை மடத்தில் அத்தியயனம் செய்யும் பிள்ளைகளும், சில பெரியவர்களும், பக்கமாக உட்கார்ந்திருந்தனர். முன் வரிசையில் பெரிய வித்து வான்கள் அமர்ந்திருந்தனர். பெண்கள் பகுதியில் முன் வரிசையில் சுசீலாவும் வசந்தியும்; அவர்களுக்குப் பின் னால் லட்சுமியம்மாளும் சுந்தரியும் காயத்திரியும் உட் கார்ந்திருந்தனர். சபையைப் பார்த்த ஹரி சட்டென்று திடுக்கிட்டான். முன்வரிசையில் காந்தாமணி அவனையே