பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 175

பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் அவள் தாயார் இருந்தாள். ஹரியும் அவளை ஒரு கணம் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டான்.

பஜனை மடத்துக் குருக்கள் தீபாராதனைத் தட்டை ஹரியிடம் நீட்டுகிறார். கற்பூரத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்ட ஹரி, எதிரே இருந்த வித்துவான்களுக்கும் ரசிகப் பெருமக்களுக்கும் கை குவித்து வணக்கம் தெரி வித்தான். குருநாதரையும், ஸ்ரீராமசந்திர மூர்த்தியையும் ஒரு கணம் மனதில் ஸ்மரித்துக் கொண்டு தியானத்தில் இருந்தான். பிறகு, ஆரம்பிக்கலாமா?’ என்ற தோரணை யில் பக்கவாத்தியக்காரர்கள் பக்கம் பார்த்தான். பாகவதர் ஒரு நிமிஷம் மனத்துக்குள் வியந்து கொண்டார். பாட்டுத்தான் சொல்லிக் கொடுத்தோம். இந்தப் பந்தா எல்லாம் எங்கே கற்றுக் கொண்டான்? அவன் மேடையில் உட்கார்ந்திருக்கிற அழகே போதுமே!’ என்று மகிழ்ந்து போனார்.

கலெக்டர் பேசி விட்டாராம்’ என்று நாகசாமி யாரிடமோ விசாரித்து வந்து கூறினான்.

பரவாயில்லை. எனக்கு அது முக்கியமல்ல’’ என்று பாகவதர் கூறிய போதே, பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் தலையை ஆட்டினார். மறுகணம் தம்பூராவின் இனிய ஒசையைத் தழுவிக்கொண்டு ஹரியின் குரல் காற்றிலே

“கணிரென்று ஒலித்தது. o

பாகவதர் எதிர்பார்க்கவே இல்லை. எடுத்ததுமே “நாட்டக்குறிஞ்சி’ வர்ணத்தை துரித காலத்தில் ஆரம்பித்தான். அதை மூன்று காலம் பாடி மளமள வென்று பத்து ஆவர்த்தனம் ஸ்வரம் விவகாரமாகப் பாடி அவன் முடிப்பதற்குள் ‘சடசட’ என்று மழை பெய்வது போல் கரகோஷம் காதைப் பிளந்தது. பஞ்சு அண்ணாவும்

ராஜப்பாவும் அதற்குள் உஷாராகி விட்டனர்.