பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 177:

அவனுடைய சாரீரத்தையும், சாதக பலத்தையும்

கண்டு எதிரே இருந்த பெரிய பெரிய வித்துவான்களே பிரமித்தனர். அவன் ராகம் பாடுகிற பந்தாவையும்,

கச்சிதமாகக் கீர்த்தனைகளைப் பொறுக்குகிற அழகையும்,

கக்சேரியை நிர்வகித்துப் போகிற திறமையையும் கண்ட அனைவரும், ஹரியின் இடத்தில் பாகவதரே அமர்ந்திருப்

பதாகத்தான் உணர்ந்தனர். அதே குரல், அதே பாணி அதே சிரிப்பு!

ஹரி மெய்ம்மறந்து கல்யாணி ராகத்தைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் பாடிக்கொண்டிருந்தான் என்பதைவிட அந்த ராகதேவதையே அவன் முன்னால் வந்து நர்த்தனமாடிக் கொண்டிருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும். லட்சுமியம்மாளுக்கு அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது. அப்பனே நீ போன ஜன்மத்தில் என்ன பூஜை செய்தாயோ, அல்லது எந்த மகானுடைய அவதாரமோ எனக்குப் புரியவில்லை. உன் குரலும், நீ பாடுகிற பாட்டும் யாராலும் சொல்லிக் கொடுத்து விருவன அல்ல, ஏதோ நாங்கள் செய்த பாக்கியம், தெய்வம் உன்னை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக் கிறது. உன்னுடைய அருமை தெரியாமல் நாங்கள் ஏதாவது நடத்தியிருந்தாலும், ஹரி, எங்களை மன்னித்து விடு. இனிமேல் நீ, எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு துரும்பை Fடுத்துப் போட நான் அநுமதிக்கமாட்டேன், என்று எண்ணிக் கொண்டாள். சுந்தரி இந்த உலகத்திலேயே இல்லை. தன் இரு கண்களையும் மூடிக் கொண்ட அவள் ஹரி செய்கிற நாதோபாசனையில் அப்படியே மூழ்கி விட்டாள்.

ஹரி கல்யாணி ரகாம் பாடி முடித்தவுடன் எதிரே இருந்த மகாவித்துவான் முத்தையா பாகவதர் சட்டென்று எழுந்து நின்றார். சபையோரை நோக்கி, “ரஸிகமணிகளே, இந்தக் குழந்தையின் பாட்டு, பெரிய மகாராஜாக்கள்