பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கேற்றம் 181

திருவையாற்றில் ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா வின்போது கச்சேரிகள் நடக்கும் நான்கு நாட்களும் பாக வதருடனேயே ஹரி இருப்பான். திருவிசநல்லூர் ஐயா வாள் உத்ஸவத்திலும்; கும்பகோணம் சோலையப்பன் தெருவில் நடக்கும் ஸ்ரீ ராமநவமி உத்ஸவத்திலும்சிறியது-பெரியது என்று பாராமல்; ஒரு வித்வான் பாடுவது விடாமல் ஹரி சென்று அவ்வளவு கச்சேரிகளையும்

கேட்பான்.

அவைகளினால் ஏற்பட்ட அனுபவம்: கேள்வி ஞானம் - நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும் அன்னப் பறவை போல அவனுக்குப் பயன் பட்டிருக்கிறது.

ஒவ்வொரு ராகங்களிலும், கிருதிகளிலும், என்றோ, எங்கோ, யாரிடமோ கேட்ட நல்ல நல்ல சிறப்பான அம் சங்கள்: அபூர்வப் பிடிகள் இவற்றையெல்லாம் அவ்வப் போது திரட்டி, ஒன்று விடாமல் கிரஹித்துத் தனதாக்கிக் கொண்டு ஹரி இன்று அதை ஜனங்களுக்குத் தன் குரலில்: தன் பாணியில் வழங்கிய போது- மக்கள் மகிழ்ந்து போனார்கள். ரசிகர்கள் தங்கள் தங்கள் அபிமான வித் வான்களின் அபூர்வ இசையைக் கேட்பது போல் பூரித்துப் போயினர். ஆனர்ல்

ஹரி அதற்காக தான் கற்றுக் கொண்டதையும், கேட்ட வற்றையும், கிளிப் பிள்ளை மாதிரி ஒப்புவிக்கவு மில்லை.

-தன் குருவின் பாணியிலிந்து மாறுபட்டோ, அல்லது தனக்கென்று ஒரு தனித் தன்மை இல்லாமலோ பாடு கிறான் என்று யாருமே சொல்ல முடியாத அளவிற்கு ஹரி தன்னுடைய அரங்கேற்றக் கச்சேரியிலேயே -எவருடைய அனுமானத்திற்கும், அளவு கோலுக்கும் அப்பாற்பட்ட இசை மேதையாகத் தோன்றினான்.

அருகிலிருந்த பஞ்சு அண்ணா பூரித்துப் போனார். சிறிய ஆலம் விதையினுள்-கொம்பும், கிளையும், வேறாம்