பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 புல்லின் இதழ்கள்

கத்திக் கொண்டேயிருந்ததோ. நல்ல வேளை, வந்த திருடன் அவள் கழுத்திலும் நாலு போடாமல் போனானே!”

எடுத்துச் சென்றவன் எப்படியம்மாத் திருப்பிக் கொண்டு வந்து போட முடியும்? அவன் தான் போலீவில் இருக்கிறதாகப் பாபு ஸார் வந்து சொல்லிவிட்டுப் போனாரே’ என்றாள் சுசீலா.

‘அப்படி என்றால், நீ கச்சேரிக்கு நெக்லெவே போட்டுக் கொண்டு போகவில்லை என்று நினைக்கிறேன். கழுத்தில் போட்டுக் கொண்டு, முகம் கழுவ வந்தபோது இங்கே விழுந்து விட்டதோ என்னவோ? பாவம் அநியாயமாக இந்தப் போலீஸ் யாரையோ பிடித்து அடைத்து வைத்திருக்கிறதே!’ என்று அங்கலாய்த்த வண்ணம், ஏண்டி சுசீலா விழிக்கிறாய்? உனக்குக் கச்சேரிக்கு நெக்லெஸைப் போட்டுக் கொண்டு வந்த தாக நன்றாக ஞாபகம் இருக்கிறதா?’ என்று சட்சுமி யம்மாள் படபடப்புடன் கேட்டாள்.

இரு அம்மா, அதுதான் யோசிக்கிறேன். கழுத்திலே மாட்டிக்கொண்டது ஞாபகம் இருக்கிறது. பிறகு முகத் தில் எண்ணெய் வழிகிறது என்று மறுபடியும் கிணற் றடிக்கு வந்தேன்’ என்று சசீலா கூறிமுடிப்பதற்குள், * பின்பு என்ன? அது இங்கேயே கழன்று விழுந்துவிட்டது. நல்ல வேளை, தெருவில் விழாமல் போனதே” என்று லட்சுமியம்மாள் முடித்தாள். சுசீலாவின் அஜாக்கிரதை யையும் அதிர்ஷ்டத்தையும் பற்றியே பேசினாள். அதற்குள் குளியலறையிலிருந்து வந்த காயத்திரி, என்ன அம்மா, ஏன் சுசீலா கத்தினாள்?’ என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்டாள். அதன் பிறகு காயத்திரி உட்பட எல்லாருமே லட்சுமியம்மாளின் வார்த்தைகளை ஊர்ஜிதம் செய்வதுபோல் சுசீலாவுக்கு அசட்டுப்பட்டம் கட்டினர்.