பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல முடிவு 265

பழத்தையும் பணத்தையும் பையில் கொட்டிக் கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் பாவி பக்கிரிதான் எங் கிருந்தோ எமன் மாதிரி வந்து எனக்கே தெரியாமல் இருந் ததைத் தட்டிக் கொண்டு போய்விட்டான்’ என்று காந்தா மணியைப் பற்றின விவரங்களைச் சொன்னான்.

உடனே காயத்திரி, பக்கிரியை எதற்காக அநாவசி யமாகத் திட்டுகிறாய்? அவன் தனக்காகவா கேட்கிறான்? அவன் இல்லாவிட்டால், நீ, அல்லவா ஒவ்வொரு தடவையும் ஊருக்குப் போக வேண்டியிருக்கும்?’ என்று கூறினாள். ஹரி பதில் பேசவில்லை.

பிறகு ஹரிக்கு அவளே ஒரு யோசனை சொல்லிக் கொடுத்தாள். ‘காந்தாமணியின் பெயரை எடுத்தால் மறுபடியும் அப்பா மறுக்கலாம். ஆகவே யாரோ ஒரு தஞ்சாவூர் மிராசுதாருக்கு - பெயர் கல்யாணராமன் என்று வேண்டுமானாலும் சொல்லு - டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லு. அப்பாவின் வைத்தியச் செலவு போகிற போக்கைப் பார்த்தால் வீடு, நகைகள் எல்லாவற்றோடு ஆளையும் சேர்த்து விழுங்கி விடும் போல் இருக்கிறது. சுந்தரியிடமிருந்து எவ்வளவு தான் பற்றிக் கொள்கிறது? அளவு இல்லையா? அப்பா வுக்கு அதுவே பெரிய பாரமாக மனத்தை உறுத்துகிறது. ஆனால் இதில், நீ அவருக்கு அதுசரணையாகத் தொழிலும் செய்கிற யோக்கியதை அடைந்துவிட்ட திருப்தியினால் தான், அவர் ஒரளவாவது மன நிம்மதியுடன் இருக்கிறார்” என்று கூறினாள்.

ஹரி காயத்திரியின் புகழ் மாலைக்கெல்லாம் கழுத்தை நீட்ட விரும்பாதவன் போல், வேகமாகப் பஞ்சாங்கத்தைப் புரட்டிச் செளகரியமான ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தான்.

அன்று வருவதாகத் தஞ்சைக்கும் கடிதம் எழுதிப் போட்டான்.

பு. இ.-17