பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 புல்லின் இதழ்கள்

எந்தக் காரியத்துக்காகவும் மனத்தையோ உடம்பையோ அலட்டிக் கொள்ளக்கூடாது. மறுபடியும் அட்டாக்” வராமல் நீங்களே உங்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்’ என்று எச்சரித்தார்.

“அதையெல்லாம் என்னிடப் சொல்லி என்ன செய்ய? இவர்களிடம் சொல்லுங்கள். எல்லாம் இவர்கள் கையில் தான் இருக்கிறது. சிரிப்பு மூட்டினால் சிரிக்கிறேன்: இவர்கள் அழ வைத்தால் அழுகிறேன். என்னைத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகத் தெய்வம் முடக்கிப்போட்டு விட்டதே!” என்றார் பாகவதர்.

“பார்த்தீர்களா? இப்போதுதானே நான் உங்களுக்குச் சொன்னேன்? இப்படி நமக்கு நேர்ந்துவிட்டதே என்று சற்று முன் கூறிய கவலை ஒன்று போதுமே உங்கள் உடல்நலனைப் பறிக்க விரைவிலேயே நீங்கள் எழுந்து முன்போல் ஆகிவிடப் போகிறீர்கள்’ என்று ஆறுதலான வார்த்தை களைக் கூறுவிட்டு டாக்டர் விடைபெற்றுச் சென்றார்.

சுந்தரி டாக்டர் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். கணவருக்குப் பணிவிடை செய்ய இனி எப்போது சந்தர்ப்பம் கிட்டுமோ அருகில் இருக்கக் கூடக் கொடுத்து வைக்கவில்லையே! என்ற வருந்தம் சுந்தரிக்கு மேலிட்டது.

ஹரியின் கச்சேரி எங்கே நடந்தாலும் அங்கே அவனுக்கென்று விசிறிகள் கூட்டம் திரண்டு வந்தது: தஞ்சையிலும், திருச்சியிலும் இன்னும் எண்ணற்ற சபை களிலும் அவனுடைய கச்சேரி தொடர்ந்து நடந்து, ஏராளமான சிறந்த ரசிகர்களைத் திரட்டித் தந்தது. ரசிகர்களின் பாராட்டுக்களோடு, பத்திரிகைளின் சிறந்த விமரிசனங்களும் அடிக்கடி வெளியாகி அவனுக்குப் புகழ் சம்பாதித்துக் கொடுத்தன.