பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணப் பேச்சு 285

அடிக்கடி கச்சேரிகளுக்கு ஏற்பாடாகி, பம்பாயும், டில்லியும், பட்டணமும் அவனுக்குச் சர்வ சாதரணமாகி விட்டன. நாளடைவில் ஹரியின் கச்சேரி இல்லாத பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணமே இல்லை என்று ஆகி விட்டது.

இப்படி வாழ்க்கையில், பாதி நாள் ரெயிலிலும், கச்சேரி மேடைகளிலும் ஹரிக்குக் கழிந்தது. இத்தனைக்கு மத்தியிலும் ஒய்வு இருக்கும் போதெல்லாம் காந்தாமணி யின் வீட்டுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை அவன் நிறுத்தவில்லை. மிகக் குறுகிய காலத்துக்குள் காந்தாமணி வெகுவாக முன்னேற்றம் அடைந்து வந்தாள். படிப்படி யாக அவள் பழைய பாடந்தர முறைகளை எல்லாம் மாற்றிக் கொண்டாள். முழுக்க முழுக்க ஹரியின் பாணியே அவளுடைய பாட்டில் அமைந்துவிட்டது.

வசந்தியிடமும் சுசீலாவிடமும் ஹரி எதிர்பார்த்து ஏமாந்ததைக் காந்தாமணி ஈடுசெய்தாள். தனக்குக் கிடைத்த கால அவகாசத்துக்குள், அவள் அவனது திறமையை நன்கு பயன் படுத்திக்கொண்டாள். அவன் இரண்டு நாளைக்கு ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டிருந்தால், அவள் ஒரு நாளைக்கு இரண்டு கீர்த்தனைகளை அவனிடம் பிடிவாதமாகக் கற்றுக் கொண்டு, அடுத்த தடவை பாடத்துக்கு ஹரி வரும் போது அவன் பிரமிப்பில் ஆழும்படிப் பாடிக் காட்டினாள்.

இதனால் அவர்களிடையே போட்டி வலுத்தது. அது அவனுடைய அபிவிருத்திக்கு உதவியாக இருந்தாலும், நாளடைவில் அவள் தன்னையே மிஞ்சிவிடுவாள் என்ற உண்மையான அச்சம் அவனது உள்ளத்தில் ஏற்பட்டது.

ஆகவே தன்னைப் பின்பற்ற முடியாதபடி, அவள் குழம்பித் திணறும் வண்ணம், புதுப் புதுச் சங்கதிகளைக் கிருதியில் ஆராய்ந்து சேர்த்தும், ராகங்களில் அவள்