பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 புல்லின் இதழ்கள்

எண்ணிக்கூடப் பார்க்க முடியாத இடங்களையெல்லாம்

தொட்டு சஞ்சரித்தும், தன் குருதியைப் பிழிந்து குரலைக் கூட்டினான் ஹரி.

அதே சமயம் - காந்தாமணி என்னும் கருவியால் நாம் முன்னைவிட எத்தனை தூரம் சங்கீதத்தில் அபிவிருத்தி அடைந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்த்து மனம் பூரித்தான்.

தந்தி மணியார்டரும், சாதாரண மணியார்டரும் ஹரிக்குப் பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் இருந்தன. காந்தாமணியோ, ஹரி வரும்போதெல்லாம் எத்தனை சொல்லியும் கேளாமல், பிடிவாதமாக நூறும் இருநூறும் பையில் திணித்து அனுப்புவாள்.

பாகவதரின் வீட்டில் செல்வம் கொழித்தது. பக்கிரிக் கும் இடைவிடாமல் யோகம் அடித்துக் கொண்டிருந்தது. அக்காவுக்கு அளவோடு கொடுத்துவிட்டுக் கொசிரை’ எல்லாம் தன் செலவுக்கு வைத்துக் கொண்டான். சாதாரணக் கைலியும், சிங்கப்பூர் பனியனும் போய், சில்க் கைலியும் கிளாஸ்கோ மல் ஜிப்பாவுமாகக் காட்சி அளித்தான்.

ஆனால் இவற்றையெல்லாம் ஹரி கண்டும் காணா மலும் இருந்துவிட்டான். தன்னிடம் பணத்தையும் வாங்கிக் கொண்டுபோய், ஏழை போல் வேஷமும் போட்டுக் கொண்டு அலையாமல், இப்படிப் பளிச்சென்று காட்சியளிக்கும் பக்கிரியின் நேர்மையை வரவேற்றான். எப்படியாவது அவர்களும் செளகரியமாக இருக்கட்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தான்.

இப்படி இசையின்பத்தில் சுகவாழ்வு வாழ்ந்து கொண் டிருந்தவன், புறவாழ்வுக் கவலைகளை எல்லாம் கைவிட் டான். மனம் எப்போதும் ஆனந்தத்தினால் நிறைந் திருந்தது. அதை அவன் தேகத்தின் காந்தியும், முகத்தின்