பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைப் போட்டி 299

நல்ல வேளையாகச் சுசீலாவின் வாயில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பினோம்’ என்ற ஆறுதல் அவளுக்குப் பிறந் தது. ஆனால் பெரியம்மா சொன்னபடி ஊருக்குப் போனதும் அம்மாவிடம் எதையும் ஒளித்துக்கூற அவள் விரும்பவில்லை. உடனே அம்மாவிடம் சென்று ஹரியைப் பற்றிய விஷயத் தைக் கூறினால்தான் சமாதானம் ஆகும் போலிருந்தது. அதற்காகவே அவள் சீக்கிரம் புறப்பட்டுவிட்டாள்.

வசந்தி வாசற்பக்கம் வந்தபோது: கையில் ஏதோ கடிதத்துடன் உள்ளே நுழைந்த சுசீலா, வசந்தியைக் கண்டதும் தலையை இடத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றாள். அவளுடைய அவமதிப்பைத் தாங்க வசந்தியால் முடியவில்லை. அந்தக் கணத்தில் அவளுக்கு எப்படித்தான் அத்தனை ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. சுசீலா!’ என்று உரக்கக் கூவிக்கொண்டே வீட்டினுள் திரும்பினாள்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவள் போல் கையில் இருந்த கடிதத்தைத் தந்தையிடம் படித்துக் காட்டிவிட்டு, ஹரிக்கு உடம்பு சரியில்லையாம் அம்மா “ என்று தாயினிடம் கடிதத்தைக் கொடுத்துச் சுசிலா கண்ணிர் விட்டாள்.

வசந்தியால் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்

டிருக்க முடியவில்லை. அடேயப்பா, என்னமாக நீலிக் கண்ணிர் வடிக்கிறாள்! நேரில் இருந்தால் திட்டிக் கொண்டே இருப்பதும், கண்காணாதபோது கண்ணிர்

விடுவதும் - என்ன மாய்த்தான் வேஷம் போடுகிறாள்! எங்கிருந்துதான் இதையெல்லாம் கற்றுக் கொண்டாளோ மாய்மாலக்காரி!” என்று மனத்துக்குள் சுசீலாவைத் திட்டிக் கொண்டே சென்றாள் வசந்தி.