பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 புல்லின் இதழ்கள்

என்ன? அம்மா இல்லையா?”

‘இல்லை. பிருகதீசுவரர் கோயிலுக்குக் கதை கேட்கப் போயிருக்கிறாள். ஒரு மணிக்குத்தான் வருவாள்.’

இதை ஏன் நீ சொல்லவில்லை?’

என்னை நீங்கள் எதைச் சொல்ல விட்டீர்கள்; வந்ததிலிருந்து, போ போ’ என்று விரட்டிக் கொண்

டிருந்ததைத் தவிர இந்த உலகில் யாருக்குமே நான் வேண்டாதவளாகி விட்டேன்.'”

  • சொல்ல வந்ததை, நீ வருத்தப்படாமல் தாராள மாகச் சொல்; நான் கேட்கிறேன். ஹரி விளக்கைப் போட்டான்.
  • இனிமேல் சொல்ல என்ன இருக்கிறது? சொல்ல வேண்டியதை நான் சொல்லிவிட்டேன். நானே வெட் கத்தை விட்டு மீண்டும் கூறுகிறேன்; என் ஆசை தவறாகக் கூட இருக்கலாம். ஆனால் என்னால் உங்களை மறக்க முடியவில்லை. முன்பு உங்கள் இசையைப்பற்றி மட்டுமே அறிந்திருந்தேன். இப்போது உங்களுடன் பழக நேரிட்ட சொற்ப நாட்களுக்குள், உங்கள் உயர்ந்த உள்ளம் என்னை வசீகரித்துவிட்டது. என்னை மணந்து கொள்ள உங்களுக்குச் சம்மதாமா?’’

‘உன் விருப்பம் இப்படி இருக்கும் என்று நான் எண்ணவில்லை காந்தாமணி. ஆனால், நான் அதை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன். எனக்கு முன்பே திருமணமாகிவிட்டது.’

ஹரி வார்த்தைகளை முடிக்கவில்லை; காந்தாமணி பதறியே போனாள். உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா?’’ வார்த்தைகள் ஆச்சரியத்தின் எல்லைக் கோட்டையே தாண்டி நின்றன.