பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொஞ்சும் அழகு 313

குழந்தைகள் கூட இருக்கின்றன. கர்த்தா ராகமே என் மனைவி. ஜன்ய ராகங்களே என் குழந்தைகள். இசையை ஆராதிப்பதைத் தவிர எனக்குத் தனியாக வேறு வாழ்க்கை கிடையாது. நீ எண்ணுவது போல், எனக்கு எவ்வித அந்தஸ்தும் இல்லை. கூறப் போனால், உன்னை மனத்தாலும் நினைத்துப் பார்க்கிற அருகதைகூட எனக்கு இல்லை. என் புற அழகையும், புகழையும் பார்த்து நீ ஏமாந்து விட்டாய்; இவற்றுக்கெல்லாம் புறம்பே உள்ள, என் உண்மை உருவம் உன் கண்ணுக்குப் புலப்பட்டால் நீயல்ல, எந்தப் பெண்ணுமே என்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்றே எண்ணுகிறேன்.

கூலிக்குக் காஸ் விளக்குத் தூக்கிப் பிழைக்கிற, ஒர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், இசையில் பற்றுக் கொண்டதனால், சிற்றன்னையாலும், பெற்ற தந்தை யாலும் கொடுமைக்கு ஆளானேன். வீட்டை விட்டே விரட்டப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளக் காவிரித் தாயை சரணடைந்தேன். ஆனால், என்னை ஏற்றுக்கொள்ள விரும்பாத அன்னை, பாகவதரின் காலடியில் என்னை ஒதுக்கி விட்டாள். அன்று என்னை அன்போடு கை தூக்கி ஆதரித்தவர், இன்றுவரை என்னை ஆட்கொண்டு வருகிறார்.

இந்த உலகில், தாயும், தந்தையும், குருவும், தெய்வமும், அனைத்துமே எனக்கு அவர்தாம். நீ விரும்பி, ஏற்றுக்கொள்ள விழைகிற இந்த உடம்பு அவருடையது. உயிர் அவருடையது. இப்படி எதுவுமே எனக்கென்று சொந்தம் இல்லாத என்னிடம், எதை நீ யாசிக்கிறாய்? உனக்கு நான் எதைக் கொடுக்க முடியும்? உன்னை நான், மிகச் சிறந்த மாணவிகளில் ஒருத்தியாகத் தான் கருதி, மட்டற்ற மகிழ்ச்கி கொண்டிருக்கிறேன். உன் குரல் என்னைக் கவர்ந்தது. உன் புத்திசாலித்தனமும்,

பு.இ.-20