பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. .322

புல்லின் இதழ்கள்

“பிழைத்துக் கொள்வாய்’ என்று அவளும் பதிலுக் குச் சிரித்தாள். மறுபடியும் சுசீலா வருவதற்குள் ஹரி புறப்

பட்டுச் சென்று விட்டான்.

ஒடுகிற ரெயில் ஜன்னல் வழியே வெளியுலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ஹரி.

பண்டாரவாடை ஸ்டேஷன் வந்ததும், ஹரி இரண்டு மூன்று கவுளி, இளம் வெற்றிலையாக வாங்கிப் பையில் வைத்துக் கொண்டான். காந்தாமணியின் தாய், மிகவும் அதிகமாக வெற்றிலை போடும் பழக்கமுடையவள். அது அவளுக்காகத்தான். அதேபோல் ஒவ்வொரு முறை போகும் போதும், ஹரி மறக்காமல் காந்தாமணிக்காக சுந்தரப்பெருமாள் கோவில் ஸ்டேஷனிலிருந்து, வெள்ளரிப் பிஞ்சு வாங்கிப் போவது வழக்கம். இம்முறை, அவன் கொஞ்சம் அதிகமாகவே வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கிப் பையில் அடைத்துக் கொண்டான். திருவனந்தபுரம் பாஸஞ்சர் தஞ்சாவூர் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது.

ஹரி, வேகமாகப் பையைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினான். அண்ணா நமஸ்காரம்’ என்று, இரண்டு கையிலும் காபி டிரேயை ஏந்திய வண்ணம், வி. ஆர். ரூம் பையன் ஹரிக்குத் தலையால் வணக்கம் தெரிவித்தான். அவன் சங்கீத ரசிகன். ஹரியும் பதில் வணக்கம் கூறி மேலே நடந்தான். சிறந்த சங்கீத ரசிகர்களும், அனேகமாக அனைத்து பிரபல சங்கீத வித்வான்களுக்கும் நண்பரான வி. ஆர். ரூம், உப்புமா ராயருடன் அந்தப் பையனை ஹரி அடிக்கடிப்பாகவதரோடு செல்கையில் பார்த்திருக்கிறான்.

தொடர்ந்து வந்த பையன், ஹரியை மறித்து நின்று கொண்டு, காபி சாப்பிடுங்கள் அண்ணா’ என்று யாருக்கோ ஸ்பெஷலாக எடுத்துப் போன காபியை ஹரியிடம் நீட்டினான்.

இம்மாதிரியான ரசிகர்களிடம், லெளகிகப் பேச்சோ, மறுத்துப் பேசுவதோ பயன்படாது என்பது ஹரிக்குத்