பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவல்லவே! 359.

கொள்ள உன் சம்மதத்தை இப்போது நீ என் எதிரிலேயே கூறி விட்டால், பிறகு நான் என் விஷயத்தை முடித்து விடுகிறேன்’ என்று பாகவதர் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கே சுசீலா வந்தாள்.

அப்பா, எங்களுக்குள் இது முடிந்துபோன விஷயம். ஒரு தரம் முடிவான விஷயத்தைப்பற்றி மீண்டும் என்ன அப்பா சம்மதம் கேட்கப் போகிறீர்கள்?’’

இதைக் கேட்டதும், அருகிலிருந்த லட்சுமியம்மாளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

‘ என்னடீ முடிந்து போன விஷயம்? எது முடிந்து போன விஷயம்? வசந்தியை ஹரிக்குத்தான் கொடுக்கிற தாக எத்தனையோ நாளாக நாங்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருப்பது உன் காதில் இன்றுதான் புதிதாக விழுந்ததோ? வீணாக, அந்த அப்பாவிப் பெண்ணின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே. இதுவரை இரண்டு குடும்பத்துக்கும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்து வருகிறது. இத்தனை நாளைக்குப் பிறகு ஹரி இல்லை என்று ஆனால், அம்மாவும் பெண்ணும் மனம் உடைந்து பிராணனையே விட்டாலும் விட்டு விடுவார்கள். அந்தப் பெண் ஹரியின் மீது உயிரையே வைத்திருக்கிறாள்’ என்று லட்சுமியம்மாள், மகளிடம் ஆத்திரத்தைக் கொட்டினாள்.

சுசீலாவுக்கும் இதைக் கேட்டதும் கோபம் அதிகமாக. வந்தது.

ஆமாம், ஹரி இல்லாமல் என்னாலும் தான் வாழ. முடியாது. ஆனால் அதற்காக, ஹரியை இழந்து உயிரை

விட்டுவிட எனக்கு விருப்பமில்லை; சண்டை போட்டாவது ஹரியை நான் அடைந்தே தீருவேன்.'”

  • ” துர! பேசாதே. நீ ஹரியின் மீது உயிரை வைத்திருக்கிற லட்சணந்தான் தெரிகிறதே. அவன்

|