பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தி வந்தது 379.

டாக்டர் கூறினார்: பாகவதருடைய நிலைமை மிகவும் மோசமாய்த்தான் இருக்கிறது. இந்த வியாதிக்குத் தேவை யான வைத்திய வசதிகள் கும்பகோணத்திலும் இல்லை. உடனடியாக பட்டணத்துக்குப் போவதுதான் நல்லது: வேறு வழியே இல்லை. பிரயாணம் செய்தால் ஆபத்து ஒன்றும் இல்லை. ஆனால் அதிகம் அசங்காமல் காரை மெதுவாக ஒட்டிக் கொண்டு போக வேண்டும்.’

இதைக் கேட்டதும் சுந்தரியும் லட்சுமியம்மாளும் மிகவும் பயந்து போய் விட்டனர். பட்டணத்துக்குத் திடீ ரென்று எப்படிப் புறப்படுவது? அதற்கு வேண்டிய வசதிகள் வேண்டாமா? போனதும் எங்கே தங்குவது? இங்கிருந்து யார் போவது: யார் இருப்பது? எவ்வளவு செலவாகும்? அதெல்லாம் நம்மால் ஆகுமா? என்று அவர்கள் கவலைப்பட்டுக் குழம்பிக் கொண்டிருந்தனர்.

டாக்டர் சொல்லிவிட்டுப் போனதைக் கேட்டாயா ஹரி?’ என்று கேட்டாள் லட்சுமி.

அதற்கு ஹரியிடமிருந்து என்ன பதில் வரப் போகிறது என்று, எல்லாருமே அவனுடைய முகத்தை ஆவலுடன் நோக்கிய வண்ணம் இருந்தனர். சுசீலாவின் பார்வையும் நெஞ்சும், ஹரி பட்டணம் போவதற்கு எப்படியாவது ஒப்புக் கொள்ள வேண்டுமே”, என்று துடித்துக் கொண் டிருந்தது.

டாக்டர் கூறியபடி இப்பொழுதே புறப்பட்டு விட வேண்டியதுதான். ஐயாவை இந்த நிலைமையில் வைத்தி ருப்பது தவறு. நான் அதற்குத் தயாராகவே வந்திருக் கிறேன்’ என்றுகூறி விட்டான். பஞ்சு அண்ணாவும் ஹரியின் கருத்தையே ஆதரித்து, ‘அண்ணாவை நாம் இத்தனை பேர் இருந்தும், நல்ல வைத்தியம் பார்க்காமல் இருக்கலாகாது. ஹரி கூறுவதுபோல் உடனே புறப்படுவது: தான் நல்லது’ என்றார்.