பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 புல்லின் இதழ்கள்

‘ஊருக்குப் புறப்பட நாள் கூடப் பார்த்தாயிற்றா?”

‘ம். புதன்கிழமை.”

‘ஐயா இப்போது எங்கே?’ “ என்று கேட்டான் ஹரி.

  • டாக்டரோடு போயிருக்கிறார்.’

‘ஏதோ மந்திர சக்தியினால் எழுப்பி உட்கார்த்தி விட்டாற் போலில்லை.”

ஆமாம்! எத்தனை ஆபரேஷன், எத்தனை ஊசி, எத்தனை எக்ஸ்ரே, புட்டி புட்டிகளாக எவ்வளவு டானிக்! பெரிய மகராஜாக்களுக்குக் கூட இந்த மாதிரி வைத்தியம் நடக்காது; இல்லாவிட்டால் அப்பாவாவது எழுந்திருக்க வாவது! அத்தனையும் உன்னால்தானே?” என்று பெருமிதமாக ஹரியைப் பார்த்தாள் காயத்திரி.

இல்லை, அவரால்தான் நான். அவருடைய பெரு மைதான் அவருக்கு வேண்டியதையெல்லாம் நடத்திக்

எப்படியோ: அப்பா எழுந்து நடந்து விட்டார். சுவாமி நாதன் கிருபை.’

மாலையில் ஹரி கச்சேரிக்குப் புறப்பட்ட போது, சுசீலா ஒன்றுமே நடவாதது போல்; கூடப் புறப்படு வதற்குத் தயாராகத் தன்னைச் சிங்காரித்துக் கொண்

டிருந்தாள்.

‘அக்கா, இந்தப் பூவைக் கொஞ்சம் தலையில் வைத்து விடுகிறாயா

எங்கோ சுற்றிக் கொண்டு வந்த காயத்திரி, சுலோவின் குரலைக் கேட்டுத் திரும்பினாள். நிலைக் கண்ணாடியில்