பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 புல்லின் இதழ்கள்

எனக்கு அருகதையே இல்லை; துளிக்கூட இல்லை...’ என்று கூறிக்கொண்டே வந்தவள் திடீரென்று சிறு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஹரி சட்டென்று அவள் வாயைப் பொத்தி, சுசீ! இதெல்லாம் என்ன அசட்டுத்தனமான பேச்சு! உன்னிடம் யாருக்கும் கோபம் கிடையாது’ என்றான்.

  • நிஜமாகவா?’

சத்தியமாகவா"’.

சுசீலா சிரித்துவிட்டாள். எனக்காகப் பொய் சத்தியம்கூடப் பண்ணத் துணிந்துவிட்டீர்கள்...’

ஏதோ பேச வாயெடுத்தான். அதற்குள் “ஹரி, போதும், வா’ என்று குரல் கொடுத்தாள் காயத்திரி.

ஹரி வெளியே வந்ததும், பச்சை உடம்புக் காரியிடம் இப்படித் தொண தொணக்கலாமா, ஹரி?’ என்று மெல்லச் சிரித்தாள் காயத்திரி. ஹரி வெட்கத்தினால் தலை குனிந்தான்.

அன்றிரவெல்லாம், அடுக்கடுக்கான இன்பக் கனவுகளில் சுழன்று கொண்டிருந்த ஹரி, திடீரென்று தன் எண்ணப் படகு ஏதோ ஒரு சுழலில் சிக்கிக் கொண்டதுபோல், பாதித் தூக்கத்தில் துணுக்குற்று எழுந்தான்.

“ஹரி!’ என்று பெரிதாக அலறினாள் காயத்திரி.

‘ஒடிப்போய் டாக்டரை உடனே அழைத்து வாயேன். சுசீலாவுக்கு ஜன்னி கண்டுவிட்டது. ஒரேயடியாகப் பிதற்றுகிறாள்... ஒடேன்!’

“ஐயோ!’ என்று அலற வேண்டும் போல் இருந்தது ஹரிக்கு. பைத்தியம் பிடித்தவன்போல் ஒடினான்.