பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரோதயம் 421

அவன் டாக்டருடன் வீட்டுக்குள் நுழைந்தபோது அழுகுரல்கள் வாசலில் அவனை வரவேற்றன.

காலம் மனிதனை முன் நோக்கித்தான் கட்டி இழுக் கிறதே தவிர, பின்னே செல்ல அநுமதிப்பதில்லை! சாவுதான் மனிதனின் உள்ளத்தில் எத்தனை அற்புதங் களை நிகழ்த்திவிடுகிறது! மரணம் சிலரைப் பிரித்தாலும், பலரைக் கூட்டுகிற விந்தை என்னே! சுசீலாவின் திருமணத் துக்குப் போகாமல் இருந்த வசந்தியை - சுசீலா ஊருக்கு வந்து அம்மா அழைத்தபோது கூட வீம்புக்கு வராமல் இருந்த வசந்தியை - குழந்தை பிறந்ததற்குக்கூட வராமல் இருந்த வசந்தியை - சுசீலாவின் மரணம் கட்டி இழுத்துக் கொண்டு வந்து விட்டதே!

இனி என் வருகை யாருக்கு வேண்டும்? நான் வரா மையால் யாருக்கு நஷ்டம்?’ என்று வசந்திக்கு அழுகை ஒன்றுத si ஆறுதல் விக்கும் மருந்த To இரு ந்தது H ஹரியின் கால்களில் விழுந்து கதறினாள்.

சுருதி கலைந்தாலும் யாழே உடைந்தாலும் கூட சரி செய்துவிடலாம்; ஆனால் அதை மீட்டுகிறவன் உருக் குலைந்துவிட்டால்; இனிய இசை எங்கிருந்து பிறக்கும்?

சுசீலாவின் பிரிவு ஹரியின் நெஞ்சில் பெரிய அடியாக விழுந்தது. அதன் பிறகு அவனால் பாடவே முடிய வில்லை. பாகவதரின் மனமோ, பெருவெள்ளத்தில் சாய்ந்த ஆற்றங்கரை மரம்போல் சாய்ந்துவிட்டது.

வாடிய மலர்கள் போல், நாட்களும் வாரங்களும் மாதமும் வருடமுமாக காலச் செடியிலிருந்து உதிர்ந்து கொண்டே இருந்தன. எவ்வளவு பெரிய புண்ணானால் என்ன? காலம் என்னும் வைத்தியன் கைபட்டு ஆற வேண்டியதுதானே?