பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் இந்தப் பையன்? 41

பண்ணியபோதுகூட, அவர் தன்னிடம் அன்பாக நடந்து கொண்டதாகத்தான் அவனுக்கு நினைவிருந்தது. ஆனால் தபாலாபீஸுக்குப் போய் வருவதற்குள் அவரிடம் ஏற்பட் டிருக்கும் இந்த மாறுதலுக்கு என்ன காரணம்? யாராவது என்னைப் பற்றிக் குறைவாகப் பேசி அவருக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யக்கூடிய ஒரே நபர் சுசீலா ஒருத்திதான். அவளுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்?

பக்கத்துக் கிராமத்தில் நண்பர் ஒருவர் பாகவதரிடம் கைமாற்றாகப் பணம் வாங்கியிருந்தார். அவர் குறிப்பிட்ட இரண்டு மூன்று தவணைகளும் தவறிவிட்டபடியால் அதை ஐயா வருவதற்குள் வாங்கி வரலாம் என்று எண்ணினான். இதைக் கேட்டவுடன் லட்சுமியம்மாள், ‘அவ்வளவு துாரம் போவதானால் போகும் இடத்தில் எவ்வளவு நேரம் ஆகுமோ சாப்பிட்டு விட்டுப் போ’ என்று கூறினாள். அவனுக்கும் அதுவே சரி என்று பட்டது. எல்லாருடனும்

சேர்ந்து சாப்பிட்டு விட்டால், அவரவர் மீதிக் காரியங்களைக் கவனிக்கச் செளகரியமாக இருக்கும் அல்லவா?

ஆற்றங்கரையில் குளிக்கப் போன அதிதிக்காக அனைவரும் காத்திருந்தனர். நேரம் ஆக ஆக அண்ணா வராததைக் கண்டு லட்சுமியம்மாளின் மனம் மிக்க கவலைக் குள்ளாகியது. ஆற்றில் புது வெள்ளம் கரைபுரண்டு ஒடியது. பழைய பல சம்பவங்கள் அவளுடைய கவலைக்கு உரமூட்டின, ஹரியிடம் லேசாக ஒரு கோடி காட்டித் தன் கவலையை அவள் தெரிவித்தாள். அண்ணாவுக்காக, அவனைப் போய்க் காவிரியில் பார்த்துவரச் சொல்ல அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

காவிரிக்குப் போகும்போதுகூட அண்ணா அவனிடம் சண்டை போட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை 11. இ.-3