பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணாவின் ஆணை 45

சட்டென்று ஹரியின் பக்கம் திரும்பி, இன்னும் ஏண்டா இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? நடையிலே போய்த் தட்டை வைத்துக்கொண்டு உட்காரு சாப்பாடு வரும்’ என்று கத்தியவர் தங்கை பக்கம் திரும்பி, ராத்திரி எனக்கு வேறே சமையல் பண்ணுகிறதானால் இங்கே சாப்பிடு கிறேன்; இல்லையானால் சீமாச்சு வீட்டுக்கே போய் விடு கிறேன்; அதுவும் இல்லாவிட்டால் பத்துப் பழத்தைத் தின்றுவிட்டுப் பட்டினி கிடக்கிறேன். இத்தனை காலத் துக்குப் பிறகு என்னால் இந்த அநாசாரத்தை எல்லாம் தாங்க முடியாது’ என்று அறுதியிட்டாற்போல் கூறி மாடியை நோக்கிச் சென்றார்.

பதில் பேசாமல் ஹரி தட்டை எடுத்துக்கொண்டு நடையில்வந்து உட்கார்ந்தான். துக்கம் பெரும் உருண்டை யாக நெஞ்சை அடைந்தது.