பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பெண் பார்க்க வந்தவர்

கொந்தளிக்கும் கடல்போல் மனம் தறிகெட்டுப் புரண்டது. நெஞ்சிலே குமுறிய வேதனைகள் ஹரியின் வயிற்றுப் பசியை மறக்கச் செய்துவிட்டன.

தட்டில் விழுந்த சோற்றிலிருந்து ஒரு பருக்கைகூட அவனுக்குத் தொண்டைக்குள் இறங்கவில்லை. சொந்த விருப்பு வெறுட் புக்களை வெளிக்காட்டி, யாருடைய மனத்தையும் புண்ணாக்க அவன் விரும்பவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமான உணர்ச்சியை அவன் மென்று விழுங்கி விட்டாலும், அதை ஜீரணிக்க உள்ளத்தோடு உடல் மறுத்தது. இந்தப் போராட்டத்தினால் தட்டத்தில் போட்ட சாதமும் குழம்பும் அப்படியே இருந்தன.

அண்ணாவின் முன்னால் எதுவும் செய்ய இயலாத லட்சுமியம்மாள். அவனைப் பார்த்து வருந்தி, ஹரி, சாப்பிடு. ஒன்றும் யோசிக்காதே. ரசத்துக்கானதும் கூப்பிடு’ என்று மெதுவாக அவனிடம் குனிந்து கூறிவிட்டு விருட்டென்று உள்ளே சென்றாள். i.

ஹரிக்குப் பிரக்ஞை வந்தது. லட்சுமியம்மாளின் குரலில் தொனித்த பரிவும் பாசமும், அடிபட்ட அவன் உள்ளத்துக்கு ஒத்தடம் கொடுத்தன. தன் அசட்டுத் தனமான செய்கை அம்மாவின் மனத்தை எத்தனை துாரம் புண்ணாக்கி விட்டது என்பதை எண்ணியதும், மளமள வென்று அத்தனை சோற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டான்.