பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கதவு திறந்தது

அத்தனை நேரம் கதவு தட்டிய சப்தம் பாகவதர் காதில் விழவில்லை. ஆனால் ஹரியினுடைய மெல்லிய தம்பூரா ஓசை நின்றதுமே பாகவதருக்குச் சுய உணர்வு வந்து விட்டது. பார்த்தார். எதிரே இருந்த ஹரியைக் காண வில்லை. தம்புரா பட்டுப்பாயில் கிடத்தியிருந்தது. கதவு திறந்து கிடந்தது.

பாடம் நடக்கும்போது ஹரி எழுந்து போனதில்லை. ஹரிமட்டுமில்ல; எந்தச் சிஷ்யனுமே எழுந்து போகக் கூடாது. பாகவதர் ஊரில் இருந்தால் நாள் தவறாமல் பாடம் நடக்கும். பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கதவைச் சாத்திவிடுவார். கச்சேரி பேச வந்தவர்கள் ஆனாலும் சரி, பாடம் நடக்கிறபோது வந்தால், முடிகிற வரையில் காத்திருந்துதான் ஏற்பாடு செய்து கொண்டு போவார்கள். அவர்களுக்கே இந்தக் கட்டுப்பாடு என்றால்-; வீட்டிலுள்ளவர்கள் அநாவசியமாகக் கதவைத் தட்டிவிடு வார்களா? பாகவதர், சிஷ்யர்கள் விஷயத்திவ் இவ்வளவு பொறுப்பும் அக்கறையும் எடுத்துக்கொண்டு மனச்சாட்சி யோடு நடந்து கொள்வதற்குக் காரணம், சிறு வயதில் இந்தச் சங்கீதத்துக்காக அவர் பட்ட கஷ்டங்களே.

சங்கீதம் வராது என்று தோன்றினால்; அவனிடம் தம் கருத்தை உடனே கூறி அனுப்பிவிடுவாரே அன்றி, அவன் ஆயுள் பாழாகிற பாவத்தை அவர் ஒரு நாளும் செய்த தில்லை.

தம் வீடு தேடி வரும் சிஷ்யர்களுக்கு நேரமும் காலமும் இன்றி; குளிக்கும்போதும் சாப்பிடும் போதும், படுக்கும் போதுங்கூட அருகிலேயே வைத்துக் கொண்டு புதிய