பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புல்லின் இதழ்கள்

ஆனால், காந்தாமணியின் தாய்க்கு நாட்டியம் தெரியும் என்பதை அந்த அம்மாளைப் பார்த்ததுமே புரிந்து, கொள்ளலாம்.

பாகவதர் வந்ததும் எழுந்து நின்று வணக்கம் செய்த தோரணையும், பிறகு ஒவ்வொரு வார்த்தைக்கும் அபிநயம் பிடிப்பது போல் கையை ஆட்டியும், முகத்தில் உணர்ச்சி களைக் கொட்டியும்; தெளிவாகப் பேசிய அழகையும் பாகவதர் மட்டுமின்றி உள்ளேயிருந்த காயத்திரியும், லட்சுமியம்மாளுங்கூட ரசிக்கத் தவறவில்லை. ஆனால் இத்தனைக்கும் காந்தாமணி மட்டும் அடக்கமே உருவாகத் தன் தாய் கூறுகிற அத்தனையையும் கேட்டபடி உட்கார்ந் திருந்தாள். பிறகு கங்காபாய் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினாள்.

“நான் உங்களிடம் இதுவரை வந்த காரியத்தைப் பற்றிப் பேசாமல், சுயபுராணம் பேசி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கிவிட்டேன்; மன்னிக்க வேண்டும்’ என்று கூறிய போதே பாகவதர் இடைமறித்து, நேரம் என்னவோ பொன்னானதுதான்; ஆனாலும் பரவாயில்லை.

  • I I

நீங்கள் தாரளமாகப் பேசலாம்’ என்றார்.

‘நான் வருகிறபோது உள்ளே பாட்டுச் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனந்தமாக இருந்தது. ஆனால் அவசர காரியமாகப் பன்னிரண்டு மணிக்கு நான் கும்பகோணத்தில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால்தான் உங்களைப் பாதியில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்துவிட்டேன். இதோ அருகில் இருப்பவள் என் மகள், பெயர் காந்தாமணி. இவளுக்குச் சங்கீதத்தில் அளவுக்கு மீறிய ஆசை. அதிலும் உங்கள் பாட்டு என்றால் ஒரே பைத்தியம்.’

ஆமாம், இந்தப் பெண்ணை நான் எங்கோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே!’ என்று பாகவதர் கூறும்போதே,