பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புல்லின் இதழ்கள்

-ஹரி, இந்தக் காபியை நீயே குடி இல்லையென்றால் உள்ளே கொண்டு போய்க் கொடு. என்னைக் கேட்காமல் உன்னை யார் கொண்டு வரச் சொன்னது?’ என்று சுலோ அந்த வீட்டில் தனக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதே போல் கடிந்து கொண்டாள்.

உடனே பாகவதர் சிரித்துக் கொண்டே, சும்மா சாப்பிடு சுசீலா, கூடத் துணையில்லாவிட்டால் புதிதாக வந்திருப்பவர்களுக்குச் சங்கோசமாக இருக்காதா

என்றுதான் ஹரி உனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருக் கிறான். இது தெரியாமல் அவனைக் கோபிக்கிறாயே!” என்று மகளை அடக்கினார்.

அதற்குள் காந்தாமணி, ஆமாம், எங்களுக்கும் துணை வேண்டாமா?’ என்று சிபாரிசு செய்தாள். சுசீலாவுக்கு அந்த வார்த்தை நாராசமாக இருந்தது. அத்துடன் , கடைந்தெடுத்த தங்க விக்கிரகம் போன்ற அவள் அழகையும், வைரமும் தங்கமுமாக அவள் வாரிச் சொரிந்து கொண்டு தன் இயற்கையழகைப் பன்மடங்காகப் பிரகாசிக்கச் செய்வதையும் பார்க்க சுசீலாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

இவர்கள் எதற்காக இங்கே அப்பாவைத் தேடிக் வந்திருக்கிறார்கள்? கச்சேரி சொல்லவா? அப்படியானால் வந்த காரியத்தை சட்டுப்புட்டென்று முடித்துக் கொண்டு போக வேண்டியதுதானே? கச்சேரி சொல்லவானால் அம்மாவே வந்தால் போதாதா? இந்த அழகியையும் இழுத்துக் கொண்டு வர வேண்டுமா?’ என்றெல்லாம் கலோவின் மனம் குமுறியது.

கலோவின் உள்ளக் குமுறலை தணிக்கலோ, துரண்டவே கங்காபாய் சட்டென்று விஷயத்துக்கு வந்தாள். ‘இவளுக்கு உங்களுடைய சங்கீதத்தில்

அளவுக்கு மீறிய பைத்தியம் என்று முன்னமேயே