பக்கம்:பூங்கொடி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

20

25

30

35

எழிலியின் வரலாறறிந்த காதை

எதிர்ப்பெலாங் கடந்தாள்

மெல்லிசைத் தமிழின் மேன்மை விரும்பாச் செல்வர் சிலரும் செய்தி இதழரும் மொழிவெறி கொண்டாள் எனப்பழி மொழிவது தொழிலாக் கொண்டனர் கொல்லைகள் தங்தனர்; புன்கண் ஒன்றும் பொருளெனக் கருதிலள், தன்கண் வருவாய் கழைவது வேண்டிலள் ; அத&ன விழைவோர் தாமே அஞ்சுவர்? எதையும் அஞ்சிலள் எடுத்தகற் பணியில் ஆக்கமும் கேடும் அணுகுதல் உண்டென் றுக்கமும் உரனும் மீப்பட லாயினள், அயலி லிருந்தே அழிவினை வித்தும் பயனில பேசும் பதர்சிலர் ஒழிய மயல்ஒழிக் காரெலாம் மதித்தனர் போற்றினர்; தளிர்க்கும் அவள் புகழ் ககைப்பார் இல்லை : முளைப்பவர் எவரும் முகங்கவிழ்த் தேகினர் ;

இவ்வணம் இசையால் ஏற்றம் பெற்றனள் ;

காதல் மணம்

அவ்வுழை ஒருவன் அழகிய கூத்தன் ஆடல் வல்லான் அதனதன் துணுக்கம் நாடிய புலத்கான் நாடெலாம் வியந்து

திகரிலே இவற்கென நிகழ்த்துநற் பெயரோன் புகழில் மிதப்போன், பூவை எழிலியை மலர்மண மாலை சூட்ட விழைந்தனன் , கலைஞர் இருவர் கருத்தும் ஒன்றின. , கூத்தும் பாட்டும் குலவி மகிழ்ந்தன, ஏத்தும் புகழோ எழுந்தது திசைஎலாம் ;

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/118&oldid=665593" இலிருந்து மீள்விக்கப்பட்டது