பக்கம்:பூங்கொடி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

50

55

எழிலிபாற் பயின்ற காதை

தெருள்கரச் சுவையொடு செப்பும் முறையும், உயர்த்தும் காழ்த்தும் விரித்தும் சுருக்கியும் வியக்கும் முறையாற் பண்கரு விறலும், தாளமும் இசையும் கவரு வகையில் காலமும் இடமும் கலையா நிலையில் இணைந்தும் பிணைந்தும் இசைக்கும் திறனும், குழைந்து பயன்தரு கொள்கையும் கலந்து விழைந்து மாந்தர் வியந்திடப் பாடி இசைப்பணி புரிந்தனள் எழில்வளர் பூங்கொடி ;

யாப்பியல் பயில்கென எழிலி கூறல்

நசைத்தமிழ் இசைக்திறம் நன்கறி வுறுத்திய எழிலி மீண்டும் இளையவட் கூஉய்க்

கழிமிகு புலமை பெற்றனே காரிகை ! பாடல் யாக்கும் பாங்கும் கசடற

நாடி பயிலுதல் நயங்கனென் செல்வி !

கவிதை குவிதல் வேண்டும்

யாண்டும் கவிகை யாத்திட முனைவோர் வேண்டு மளவில் விரிந்திடல் கண்டோம் ; ஆயினும் சிலரே அறிவுடைப் புலவோர் : தாயினும் மேலாம் தமிழ்மொழி ஓங்கிட நவையறு கவிதை குவிந்திடல் வேண்டும் :

கல்லாக் கவிஞர்

கவியெனும் பெயரால் கற்பனை செய்து புனைவோர் அனைவரும் புலவோர் அல்லர், துணைசெயும் யாப்பும் சொட்டவர் அல்லர், எழுத்தும் சொல்லும் பழுத்தவர் அல்லர்,

109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/128&oldid=665604" இலிருந்து மீள்விக்கப்பட்டது