பக்கம்:பூங்கொடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

மொழிவளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, இல்லறந் துறந்து, தன்னலம் வெறுத்துப் பொதுநலம் ஒன்றே பேணித்தன் வாழ்வையே கொடுக்க வ ல் ல பெண்மகளொருத்தி நம் தமிழகத்துக்கு வேண்டுமென எண்ணினேன். அவ்வெண்ணத்தின் வி ளை ேவ இப் பூங்கொடி

சமயங்கட்கெல்லாம் தனித்தனிக் காப்பியம் பெற்று மிளிரும் நம்தாய்மொழி, மொழிக்காக ஒரு காப்பியம் பெறுவதும் ஆக்கந்தானே!

மொழி நலங்கருதி முற்பட்டு வரும் இப்பூங்கொடி, இக்காலத்து நிகழ்ச்சிகள் ப ல வ ற் ைற உள்ளத்தில் இறுத்தி, ஊருக்கு உரைத்து கிற்பாள். உலகம் அவற் றைச் செருது, வெருது சிந்திப்பதாக அவள் நடைபற்றிக் காய்தல் உவத்தல் அகற்றி, நடுகின்று உ ன் ைம உரைப்பதாக

இப் பூங்கொடியை ஒப்பனை செய்து, தமிழகத்தே உலாவரச் செய்த வள்ளுவர் பதிப்பகத்தார்க்கும் இவள் நன்கனம் உருப்பெற்றாெளிர உற்றதோர் நற்றுணையாய் நின்ற புலவர்கள் தமிழண்ணல், முத்தரசன், ஆ. பழகி முதலிய அன்பர்கட்கும் எ ன் உளங்கனிந்த நன்றி உரித்தாகுக

காரைக்குடி, அன்பன்,

14–3—1970. முடியரசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/13&oldid=665606" இலிருந்து மீள்விக்கப்பட்டது