உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூங்கொடி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

70

75

80

85

90

மாமலர்ப் பூங்கொடி மையலேப் பெருஅக் காம வேகங் கடுகித் தாக்குறத் துடிதுடித் தாடும் நெஞ்சகம் போலக் கடிதடித் தேகும் கடுங்கால் மோதலின் படபடத் தாடின பைங்களிர்ப் பரப்பு : கூந்தலைப் பல்வகைக் கோலஞ் செய்தும், மாந்தளிர் மேனியில் மணியணி பூண்டும் , கண்ணும் புருவமும் கருமை திட்டியும், வண்ண ஆடைகள் வகைவகை உடுத்தும், ஒப்பனே முடித்த ஒண்டொடி மகளிர் கப்பிய காகற் கணவரொடு கூடி மலர்வனம் புகூஉம் மனங்கவர் காட்சி அலைவுறும் அவன்மனத்து அனலாய்க் கனற்ற ஊதுலைக் குருகின் வெப்துயிர்த் தேகினன் ;

மாளிகையில் இகை முழக்கம்

பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும், கண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும் , தெரிகரு யாழில் விரிதரும் இசையும் , முறி கரு கருவிகள் மோதுகல் லொலியும் , காப்வேங் குழலின் கனிந்தால் விசையும் , ஆய்.நூற் புலவர் அறைக்கநாற் கருவியும் , கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மாடமிசைப் பிறந்து மறுகிடைப் பாக்கது ; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர் செவியகம் பாய்ந்து சிங்தை நிறைந்தது ;

புவியகம் யாங்கனும் புகழ்மணம் மலர்ந்தது ;

142

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/161&oldid=665641" இலிருந்து மீள்விக்கப்பட்டது