பக்கம்:பூங்கொடி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

150

160

165

பெருகிலக்கிழார் வாழ்த்திய காதை

பண்ணிசை பரப்பும் பணியினள் உரவோய் ! ஈங்கவட் கூஉப் இன்னிசை கேட்டுப் பாங்கறிக் கவட்குப் பரிசிலும் நல்கிச் சீரும் சிறப்பும் செய்வன செய்து போற்றுதல் தும்போல் பொருளுணர் மாந்தர் ஆற்றிடுங் கடன்’ என ஆர்வலர் இசைத்திடப்

பெருகிலக்கிழார் அழைப்பு

பெருகிலக் கிழவரும் பெரிதுளம் மகிழ்ந்தே

அருளுளங் கொண்டவள் ஆற்றுநற் பணியைப் பிறரும் வியந்து பேசிடக் கேட்டுளேன், நெருகல் மாலை நேரிழை அவளைக் கண்டுரை யாடக் கருதினேன் , ஆயினும் கொண்டுளம்பூண்ட அத்தோகையைக் காண்கிலேன் ; ஒல்லேயிற் காண்குவென், உயரிசை கேட்குவென் ஒல்லும் வகையான் உறுதுணே புரிகுவென் என்றுளங் கனிய இசைக்கவர் ஒருநாள் துன்றுகல் லன்பால் தாயவள் வருகையை விழைங்கன ராகி விடுத்தனர் ஒலை : குழைந்துளம் உருகிஅக் குலக்கொடி இயைந்து

மாளிகைக்காட்சி

வருவோள் நீளுயர் மாமதில் வாயில் மருவா கின்றவ் வழியுட் புகுமவள் பட்டின் இயன்ற பசும்படாம் போர்த்தென வெட்டுறும் பசும்புல் விரிதரை கண்டும், புற்றசை அதனிடைப் பொலிவுற விளங்கிடும் சிற்றுளி வல்லான் செய்வினே முற்றிய கற்சிலே ஆங்காங்கு அமைந்தன கண்டும்,

10 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/164&oldid=665644" இலிருந்து மீள்விக்கப்பட்டது