பக்கம்:பூங்கொடி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

215

220

225

சிறைப்படு காதை

கிழார் குறுக்கீடு

இவ்வுரை கேட்டாங் கிருந்திடுங் கிழவர்,

செவ்விய இவட்குச் சிறுமை பூட்டும் அவ்வினு வெழுப்புதல் அடாஅது காவல! ஒவ்வும் முறையால் உண்மை ஒர்க . இவ்வணம் கடிந்துரை இயம்பின ராகப்

பூங்கொடி கலங்கா மொழி

பொதுநலம் ஒன்றே புரிபவர் எவர்க்கும் இதுபோல் இடுக்கண் இடையிடை வாலும் அதுதான் எளிதின் அகலலும் இயற்கை : சினவேல் ஐய! சிறுமைகள் நமக்கேன்? வினவுக பெரும, வினவுக பெரும!

வி ைவிடை தொடர்தல்

‘எழில்மிகும் கின்பால் இளையோன் காதல் விழைந்ததும் உண்டோ? மொழிக்கதும் உண்டோ?

ஆம்ஆம் என்னே அம்மகன் விழைந்ததும் காம மொழிகள் கழறியதும் உண்மை என்றவள் செப்ப, இசைந்ததும் உண்டோ? மன்றல் புரியகின் மனமொப் பினையோ? என்றவர் வினவ, இல்லற வாழ்வே வேண்டிலே னுகி விழைந்திப் பொதுப்பணி பூண்டுளேன் ஆதலின் புல்லும் அவன்மொழி பொருளெனக் கொளாஅது போயினென்’ என்றனள் ஆங்வன மாயின் அவன்றன் போக்கைக் தீங்கெனக் கருதிச் செற்றம் அவன் பாற் கொண்டதும் உண்டோ கொடியன் இவன் எனக்

175

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/194&oldid=665677" இலிருந்து மீள்விக்கப்பட்டது