பக்கம்:பூங்கொடி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

50

55

60

கிழார்கிறம் அறிந்த காதை

விப்துயர் எய்தி வீண்பழிக் காட்படல் விரிநீர் உலகத்து விதியோ என்று சொரிநீர் விழியர் துயருறும் மொழியர் பெரியோ ராகிய பீடுயர் அடிகள் காந்துணே யாகத் தடமனே சூழ் கரு வேங்கை நகரினை விரைந்தெப் தினளே ;

விடுதலைப் பேறறிந்து மகிழ்தல்

விங்கிய துன்பினர் ஆங்கண் வினவிப் பூங்கொடி பழியிலள் பூட்டிய சிறையகம் திறந்தது, விடுதலை பிறந்தது, பண்பாற் சிறந்தவர் கிலக்கிழார் பெருந்துணே யாக நன்னுதல் அவர்மனே கண்ணினள் எனச்சிலர் பன்னுதல் கேட்டுப் பாவையும் அடிகளும் புயலிற் சிக்கிய மரக்கலம் ஊர்வோர் வியனலை உந்த விடுகரை சேர்ந்தார் உள்ளம் போலத் துள்ளிய உவகை வெள்ளம் பொங்க விம்மும் நெஞ்சினர் பெருநிலக் கிழவர் உறுமனே குறுகி மறுவறு பூங்கொடி மதிமுகங் கண்டனர் :

அருண்மொழி வாழ்த்து

கலங்கிய கண்ணினள் காலடி வீழ இளங்கொடி உடலே இருகையால் எடுத்தனள் ; உச்சி மோந்தனள் மெச்சினள் வாழ்த்தினள் வைத்தகண் வாங்கிலள் வயிற்றினில் பால்தனே வார்த்தனே மகளே வார்த்தனே எனுமொழி சேர்த்தனள் அருண்மொழி; செம்பொருள் அடிகள்

187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/206&oldid=665690" இலிருந்து மீள்விக்கப்பட்டது