பக்கம்:பூங்கொடி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

155

160

165

170

மீனவன் வரலாறுணர்ந்த காதை

மிகும்பொருள் ஒன்றால் மேலவர் போல நாடகம் நடித்தீர்! நல்லவள் கற்பில்

கேடுரை கிளந்திர் ! கிளறேல் என்சினம் !

சாதி ஏது

சாதி என்றாெரு சொல்லினைச் சாற்றினிர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ: பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான் ; தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது ; அழியும் நாள்கான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் ருேதிய திருக்குறள் உண்மைதும் செவிப்புக விலையோ? கதிரும் கிலவும் காற்றும் மழையும் எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே ! தவிர்த்தெமை தும்பாற் சாருதல் உண்டோ ?

கபிலர் அகவல் கண்டதும் உண்டோ ?

காலம் அறிந்து கருத்தை மாற்றுக

சாதிப் பெயர்சொலித் தாழ்வும் உயர்வும் ஒதித் திரியின் உலகம் வெறுக்கும் ; பிறப்பால் தாழ்வுரை பேசுவி ராயின் சிறப்பால் விேர் செப்புதும் முன்னேயர் மூலங் காணின் ஞாலஞ் சிரிக்கும் , காலங் கருதிக் கருத்தினை மாற்றுமின் தோலா காவினன் துணிந்திவை கூறி,

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/98&oldid=665846" இலிருந்து மீள்விக்கப்பட்டது