பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

 நானும் பயிற்சியாளன் தான் என்று வெறுமனே வாய்ப்பந்தலிட்டு பீற்றிக் கொள்வதால் மட்டும் ஒரு பயிற்சியாளருக்கு பெருமை வந்து விடாது. குழுவின் பெருந்தன்மை நிறைந்த பண்பான செயல்களால் தான் ஒரு பயிற்சியாளரை பிறரிடமிருந்து உயர்த்திக் காட்டும்.

6. ஆட்டத்தைத் தொடங்குவதற்காக நாணயம் சுண்டியெறிதலில் (Toss) வெற்றி பெற்று விட்டால், ஆடுகளத்தின் பக்கமா அல்லது சர்விஸ் போடும். வாய்ப்பா என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற உரிமை கிடைக்கும். அப்பொழுது ஆடு களத்தின் ஒரு பகுதி தான் வேண்டும் என்று தான் எல்லோரும் கேட்க விரும்புவார்கள்.

அவ்வாறு கேட்கும் பொழுது, எந்த ஆடுகளப் பகுதி வசதியில்லாதவாறிருக்கின்றதோ ( Disadvantageous side) அதைத்தான் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், முதல் இரண்டு 'முறை ஆட்டங்களில்” (Set) ஆளுக்கொரு ஆட்டத்தில் வென்று மூன்றாவது முறை ஆட்டம் வரும் போது, வசதியுள்ள ஆடுகளப் பகுதி வந்து சேரும் என்பதை உணர்ந்து, வசதியற்ற ஆடுகளப் பகுதியையே முதலில் கேட்டுப் பெற. வேண்டும்.

7. உங்கள் குழுவிடம். நீங்கள் தான் சிறந்த ஆட்டக்காரர்கள். உங்களை ஜெயிக்க, யாராலும் முடியாது. நீங்கள் தான் பெரும் வீரர்கள் ன்ன்றவாறு புகழ் பாடி, அவர்களுக்குத் தற்பெருமையையும் தலைக்க்னத்தையும் நிறைத்து அனுப்பி விடாதீர்கள்.