பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

● கம்பங்கள்

ஆட்டத்திற்கு அத்தியாவசியமானது வலைதான் என்றாலும், அதுபோலவே வலையின் உச்ச உயரமும். வலையினை இழுத்துக் கட்டியிருக்கும்போது, ஆடுகளத்தின் நடுவே, வலை உயரத்தை அளந்து பார்த்தால், 6 அடி உயரம் இருக்கவேண்டும் என்று விதிமுறைகள் குறித்திருக்கின்றன.

பெரும்பான்மையோர், பூப்பந்தாட்ட ஆடுகளத்தை அமைத்துவிட்டு, இருபுறமும் மூங்கில் கம்புகளை நட்டு வைத்து, அதில் வலையைக் கட்டி விடுகின்றனர்.

மூங்கில் கம்புகள் வளையும் தன்மை உடையன எனறு எல்லோருக்கும் தெரியும். ஆடும் நேரத்தில், வலையின் உயரம் போதவில்லை என்று எல்லோரும் உணரும்போது, வலைக்கயிற்றை வேகமாக இழுத்து சரிகட்ட முயலும்போது, மௌனமாக மூங்கிலும் தலை வணங்கி வளைந்து கொடுக்கும்.

வளைய வளைய, வலையின் உயரம் நமக்கு உயரமாகக் கிடைக்காமற் போய் விடுகிறது. அத்துடன் கழைக் கூத்தாடி கம்புகள் போல் இருபுறமும் மூங்கில் கம்புகள் காட்சியளிக்கத் தொடங்கிவிடவே, பார்ப்பதற்கு என்னவோ போன்ற மனப்பான்மையை வேறு ஊட்டிவிடுகிறது. அதனால் பூப்பந்தாட்டத்தின் வலைக் கம்பம் என்றால், யாரும் மூங்கில் கம்புகளை பரிந்துரைப்பதில்லை .

முறையான கம்பத்தை நடவேண்டுமென்றால், ஏறத்தாழ 3 அங்குலம் விட்டமுள்ள இரும்புக் குழாய்களை ஊன்றலாம். அல்லது இரும்புக் கம்பங்களைப் பயன்படுத்தலாம். அல்லது சற்றேறக்குறைய 4