பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

போய்விடும். அதன் பயனாக. மனச் சோர்வும் மனத் கிலேசமும் மிகுதியாகி, வெறுப்புணர்வு பீறிட்டுக் கிளம்பி விடும்.

ஆகவே, ஒரு பயிற்சியாளரை அணுகிக் கற்றுக் கொள்வதற்கு முன்னர், கீழே குறிப்பிட்டிருக்கும் குறிப்புக்களைக் கற்று அதன் வழி நடந்து கொண்டால் தவறினைத் தவிர்த்துக் கொண்டு தைரியமாக வெற்றி நடைபோடலாம் என்ற நம்பிக்கையில் தந்திருக்கிறோம்

2. பந்தாடும் மட்டையைப் பிடித்தல் (Grip)

பந்தாடும் மட்டையைப் பிடித்தாடுவது ஒரு அழகான கலை நுணுக்கம் நிறைந்த செயலாகும். ஆகவே, கீழே காணும் முறைகள் எல்லாம் உங்கள் பிடித்தாடும் நுணுக்கங்களை சீர்பெறத் காண்டும் தன்மைகளாகும். அவரவர்க்கு ஏற்றவாறு, ஏதுவாக இருக்கும் தன்மையில், ‘இப்படிப் பிடித்துக் கொண்டிருந்தால் ஆட நன்றாக இருக்கும்’ என்கிற திருப்தியான உணாவினை ஊட்டுகின்றவாறு தான் உங்கள் கைப் பிடிப்பு அமைய வேண்டும்.

ஒரு சிலர், பந்தாடும் மட்டையை மிகவும் கெட்டியாகப் (Tightly) பிடித்துக் கொண்டே ஆடுவார்கள். அப்படி அவர்கள் பிடித்துக்கொண்டிருப்பது, மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறோம், என்றநினைவுடன் இருப்பதாக அர்த்தம். இவ்வாறு உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பதானது, இறுக்கமாகப் பிடித்திருக்கும் விரல்களுக்கு வலியையும் கஷ்டத்தையும் உண்டாக்குவதுடன், மணிக்கட்டுப் பகுதிகளுக்கும்