பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

வேதனையைத் தந்து, பந்தை அடித்தாடுகின்ற அந்த நேரத்தில், சரியாக அடித்தாடிவிட முடியாதவாறு செய்து விடும்.

அழுத்தி இறுக்கமாகப் பிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளாமல், முதலில் பந்தாடி மறுபுறம் அனுப்பி, பிறகு தன்னிடத்திற்குப் பந்தானது திரும்பி வரும்வரையிலுள்ள இடைவேளை நேரத்தில், பந்தாடும் நட்டையிலிருந்து கைப்பிடியை சற்றுத் தளர்த்திப் (Relax) பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த முறையானது, மீண்டும் பந்தை வலிமையாக அடித்தாட உதவி செய்யும். இல்லையேல், கை வலிப்பது போலவோ, அல்லது மட்டையானது கையின் ஈரப் பசையில் நழுவிச் செல்வது போலவோ இருக்கும் உணர்வு ஏற்படும்.

பந்தாடும் சமயத்தில் மட்டுமே, கொஞ்சமாக மட்டையை இறுக்கமாகப் பிடித்திருக்க வேண்டும். அப்பொழுது, பந்தை சரியான திசைக்கு (Direction) அடித்தாடி அனுப்பவும், அல்லது வரும் பந்தை சரியாக எடுத்தாடி விடவும் கூடிய நல்ல சூழ்நிலையை இம்முறை உருவாக்கும்.

எப்பொழுதும் பந்தாடும் மட்டையை ஆடுவதற்குத் தயாராக இருப்பதுபோல் தான் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். மட்டையை கீழே தொங்க விட்டுக் கொண்டோ அல்லது மாற்றி மறு கையில் பிடித்துவைத்துக்கொண்டோ இருந்துவிட்டு, பந்து தனக்கருகில் வந்தவுடன் மட்டையை உயர்த்தி ஆட முயல்வது தவறான ஆட்ட முறையாகும்.

எப்பொழுதும் ஆடுவதற்குத் தயாராக இருப்பது போல், பந்தாடும் மட்டையை முன்புறமாக உயர்த்திப்-