பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வருகின்ற பந்தை விரும்பிய இடத்திற்கு எதிர் ஆடுகளப்பகுதிக்கு முன்கைப் புறமாக அல்லது பின் கைப்புறமாக எளிதாக அனுப்பி ஆடுவது.

பந்தை மேலெழும்பிச் செல்லுமாறு உயர்த்தி (Lob) விரும்பிய இடத்திற்குப் போய் சேருமாறு அனுப் ஆடுவது.

எடுத்தாட முடியாத கோணங்களில் (Awkwar Angles) பந்து வந்து விடுகிற பொழுது, கடினமான் நிலையை உண்டுபண்ணிய அந்தப் பந்தை சரியாக எடுத்தாடி அனுப்பி விடுவது.

மேலே கூறியது போன்ற தடுத்தாடும் ஆட்ட முறைகளை விருத்திப் பண்ணிக் கொள்கின்ற வகையில் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும். இந்தத் திறன் நுணுக்கங்கள் எல்லாம் அடைவதற்கு சிறந்த முன்னுணரும் அறிவான மதிநுட்பம் (Sense of Anticipation) வேண்டும்.

பந்து வருகின்ற வேகத்தையும், செல்லுகின்ற திசையினையும், எங்கே போகிறது, எங்கே போய்விழும் என்ற கணிக்கின்ற ஆற்றலையும், பயிற்சிக்காக ஆடுகின்ற பொழுதே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தாக்கி ஆடுதல்

இவ்வாறு பந்தின் போக்கினைக் கணித்தாடும் முறை கைக்குக் கிடைத்துவிட்டால், அதன்பிறகே அடித்தாடும் ஆற்றலுக்கு முயலவேண்டும்.

தாக்கி, ஆடுகின்ற ஆட்டமான அடித்தாடும் ஆட்டத்தை அட முயல்பவர்கள் எடுத்த எடுப்பிலே