பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

3. ஆட்ட நேரத்தில், தான் இழைக்கின்ற தவறுகள் என்னென்ன என்பனவற்றை அறிந்து கொண்டு அவற்றைத் தவிர்த்து விடவேண்டும். தவிர்த்து விடுவதற்கும் ஏற்ற முறைகளை மேலும் தெரிந்தவர்கள் மூலம் கற்றுக் கொள்வதுடன், அவற்றையே முழுமூச்சுடன் பின்பற்றி ஒழுகி வர வேண்டும்.

4. பொழுது போக்குவதற்காக ஆடினாலுங்கூட, ஆட்டத்தை முறையாகவே, விதிகளைத் தழுவிய நிலையினில் தான் ஆடவேண்டுமே தவிர, ஏனோ தானோவென்று ஆடுவதும், குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதும், மட்டரகமாக நடந்துகொள்வதும் வளர்ச்சியைக் கெடுத்துவிடும்.

ஆடுகளம் என்பதும் கோயில் போலத்தான். வாழக்கைக்கு வேண்டிய நல்ல பண்புகளையும், சிறந்த தேகாரோக்கியத்தையும், உன்மையான மகிழ்ச்சியையும் ஆடுகளம் வழங்குவதால், தெய்வத் திருக்கோயில் முன் நல்லதை நினைத்து நல்லதையை கேட்க விழைதல் போல, நல்லனவற்றையே நினைந்து ஆடப் பழகிக் கொள்ள வேண்டும்.

5. உண்மையான ஆர்வத்தால் தான், உற்சாகம் அதிகமாகும், உள்ளம் மகிழும் உற்சாகத்தில் செய்யும் காரியங்களிலே தான் உள்ளம் ஒன்றிப்போய் ஒருமித்த ஈடுபாடு நிறையும். இணையில்லா ஈடுபாட்டுடன் விளையாடும் பொழுதுதான், இனிய பல திறன் நுணுக்கங்களை எளிதாகவும் இயல்பாகவும் கற்றுக்கொள்ள முடியும்.