பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


அத்தகைய ஆற்றல்மிகு கிளர்ச்சி நிலையில் தான். சாகசங்கள் மிகுதியாகும். தந்திரங்கள் விளங்கும். சாமர்த்தியங்கள் விரிவடையும். ஆகவே ஆட்ட அடிப்படைத் திறன்கள் அனுபவத்தினாலேயே அளவிலாது கிடைக்கின்றன என்னும் அரிய மொழியினை உணர்ந்து, பழகுவோர் பயன் பெறல் வேண்டும்.

6. அடித்தெறிந்து வழங்கும் 'சர்வீஸ்' போட்டே வெற்றி எண்களைப் பெற்றுவிடவேண்டும் என்று ஆசைப்படுவதும், அபிலாஷையில் துடிப்பதும் தவறாகும் அதற்காக அதிகமான முயற்சியை மேற்கொள்வது வழுக்கல் பாறையில் செருப்பணிந்து நடக்க முயல்வது போலாகும்.

அடித்தெறியும் சர்வீஸ் மட்டுமே ஆட்டமல்ல அந்த சர்வீசானது வெற்றி எண் எடுத்திட வழியே தவிர, அதுவே வெற்றியை விளைத்துத் தரும், சித்துவேலை என்று எண்ணிவிடக் கூடாது. அதனால் சர்விசை ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புவது போலவே, ஆடும் முறைகளிலும் அதிகக் கவனம் செலுத்திட வேண்டும்.

7. நீங்கள் சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற விருப்பத்தால் நண்பர்கள் அறிவுறை கூறுவார்கள். நல்லனவற்றையே கேட்டுக்கொள்ள வேண்டும் பயிற்சியாளர் ஆட்டமுறைகளைக் கற்றுத் தருவார். அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன் மட்டும் திருப்தியடைந்து விடக் கூடாது. தானும் அதைப் பின்பற்றிப் பழகிக் கொள்ளும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.