பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49


அத்துடன் நில்லாது, சிறந்த ஆட்டக்காரர்கள் ஆடுகின்ற போட்டி ஆட்டங்களைப் பார்த்து, அவர்கள் கையாளுகின்ற ஆட்டமுறைகளையும் புரிந்து கொண்டு தாங்கள் ஆடிப்பழகும் சமயங்களில் எல்லாம், என்னென்ன முறைகளைக் கையாள முடியுமோ, அவற்றையெல்லாம் பின்பற்றிட முயல வேண்டும்.

7. போட்டி ஆட்டத்தில் பங்குபெறும் பொழுது :

ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் போட்டி ஆட்டத்தில்(Match) பங்குபெற வேண்டும் என்ற ஆவல் அளவில்லாமல் உண்டாவது இயற்கையே. நன்றாக ஆடத்தெரிந்தபிறகு தான் போட்டிகளில் கலந்து கொண்டால் தானே நன்றாக விளையாட வரும் என்று வாதம் புரியவும் இடம் இருக்கிறதே!

போட்டி ஆட்டங்களில், பழகும் ஆட்டக்காரர்களுக்கு விளையாட வாய்ப்பு வந்துவிட்டால், அதனை சமாளிக்கும் விதத்தில்தான் , சக்திகள் பெருகிடும். பயிற்சிக்காக ஆடும்பொழுது விதம் வேறு. போட்டியில் இருந்து ஆடும்போது தரம் வேறு.

பயிற்சியில் ஆடும்போது தெரிந்தவர்கள் எதிரிலே நின்று ஆடுபவர்களாக இருப்பதால் எவ்வாறு ஆடுவார்கள், அவர்கள் ஆட்டமுறைகள் அனைத்தும் நன்றாகத் தெரிய வாய்ப்புண்டு. போட்டி ஆட்டத்தில் எதிராட்டக்காரர்கள் ஆடுகின்றார்கள் என்றால், அவர்கள் புதியவர்கள் என்பதால், ஆட்டமும் நமக்குப் புதிராகத்தானே இருக்கும். அவர்கள் ஆட்டம் புரியாத நிலையில் நின்று கொண்டிருக்கும்போது. சுற்றி வேடிக்கை பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் வேறு,