பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும். நன்றாக ஆடவேண்டும் என்ற ஒரே நினைவுடன் (Concentration) நின்று ஆடினால், மனம் தடுமாறச் செய்யும் எந்தச் சூழ்நிலையும் ஆட்டக்காரர்களை ஒன்றும் செய்துவிடாது.

3. ஆட்டத்தில் தனக்குரிய பங்கு என்ன? என்பதை யூகித்துக்கொண்டு, அதன்படி ஆடிவிட்டாலே, அது சிறந்த ஆட்டமாக அமைந்துவிடும். அதாவது, தனக்கு சர்விஸ் வாய்ப்பு கிடைக்கும்போது தவறிழைக்காமல் (Fault) போடுதல்; தனக்கு வருகின்ற பந்தை எதிர்ப்பகுதிக்கு பின்புறம் போவது போல அனுப்பி விடுதல்; எதிர்க் குழுவில் மைய ஆட்டக்காரர்க்கும் (Centre Player) முன்னாட்டக்காரர்களுக்கும் (Forwards) கிடைக்காதவாறு, பின் ஆட்டக்காரர்களுக்கிடையே அனுப்பி வைத்தல்.

மேலே கூறியவாறு, தன்னிடம் வரும் பந்தை ஆடி அனுப்பிவிட்டால், உங்கள் குழுவிற்கு நீங்களே அதிக நன்மையைச் செய்தவராகின்றீர்.

4. பிறரைப் பற்றிக் கவலைப்படாமல், மற்ற அநாவசியமாக ஆட்டக்காரர்கள் மீது குற்றத்தைச் சாட்டி விட்டு தப்பித்துக்கொள்ள முயலாமல், தான் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் நியாயம் கற்பிக்க முயலாமல், தன் குழுவிற்குப் பயன்படும் நல்ல ஆட்டக்காரர் என்று பிறர் கூறும் வண்ணம் ஆடிட வேண்டும்.

5. ஒரு முறை தவறிழைத்தாலும், மீண்டும் அதே தவறைச் செய்யாத வண்ணம் எச்சரிக்கையோடு ஆடி வந்தால், நீங்கள் உங்கள் குழுவில் முக்கியமான ஆட்டக்காரராக நாளாவட்டத்தில் இடம் பெற்று விடுவீர்கள்.