பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

முறையாகும். அதனால், இவரை ‘மூன்றாவது முன்னாட்டக்காரர்’ என்ற சிறப்புப் பெயரிட்டு அழைப்பதும் உண்டு.

2. எதிர்க் குழுவினர் சர்விஸ் போடும் பொழுது, இவர் தனது ஆடுகளப் பகுதியில் தகுந்த சௌகரியமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு (Convenient Position) நின்றுகொள்ள வேண்டும். அப்பொழுது தான், வருகிற பந்தை வலிமையாக அடித்தாட (Hit) முடியும்.

சில சமயம், சர்விஸ் பந்து எடுக்க முடியாதவாறு கஷ்டமாக இருப்பதுபோல் வந்தாலும், அதை பத்திரமாக எதிர்க்குழு பகுதிக்கு அனுப்பிவிடவாவது முடியும். ஆகவே, தான் விரும்புகின்றவாறு (இஷ்டப்பட்ட) கண்ட இடத்தில், நிற்காமல், நன்றாக ஆடுவதற்கு ஏற்ற வசதியான இடம் பார்த்து நிற்கும் பொறுப்பு இவருக்குரியதாகும்.

3. எதிர்க்குழுவின் ஆட்ட முறைக்கு ஏற்ப, தனது குழுவில் உள்ள ஆட்டக்காரர்கள் ஈடுகொடுத்து ஆட முடியாமற் போகிறபொழுது, உடனே தனது ஆட்டக்கார்களது இடங்களை மாற்றி நிற்க வைத்து ஆடுகின்ற மாற்றாட்ட முறையான (Minor Changes), சிறு சிறு மாற்று அமைப்பு முறை சிலவற்றையும் ஆட்டத்தில் அவ்வப்போது கடைப்பிடித்து ஆடவேண்டியது அவசியமாகும். அதாவது, தனது குழுவின் வெற்றி வாய்ப்பு அதனால் பிரகாசமடையும் என்பதை அனுசரித்தே அத்தகைய இட மாற்றத்தையும் செய்ய வேண்டும்.

4. தனது குழுவில் (மிகச்) சாதாரண ஆட்டக்காரர்கள் இருந்தால், அவர்கள் ஆடுகின்ற முறையை-