பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எடுப்பதையும் கெடுத்து, தன் இடத்தையும் கோட்டைவிட்டு, ஆட்டத்தையே குட்டிச் சுவராக்க நேரிடும்.

5. எந்த ஒரு ஆட்டக்காரரும், தன் பாங்கர் தவறாக ஆடுகின்ற சமயத்தில் ஆத்திரப்படக்கூடாது. 'என்னடா, இப்படி ஆடி ஆட்டத்தைக் கெடுக்கிறார்களே என்ற மனச் சோர்வும் அடைந்துவிடக் கூடாது. எந்த சமயத்தில் அவர்கள் தவறிழைக்க நேர்ந்தது என்பதை எண்ணிப் பார்த்து, மீண்டும் அவர்கள் அதுபோல் தவறிழைக்காமல் ஆடக்கூடிய தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட வேண்டும்.

6. ஒரு குழுவிற்கு வலிமையானது, ஒருவருக்கொருவர் பிறரது தவறுகளை சுட்டிக்காட்டித் திட்டிக் கொண்டிருப்பதால் மட்டும் வந்துவிடாது. தவறுகளைத் தவிர்த்து, திறமையாக ஆடச் செய்வதால் மட்டுமேதான் வரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

7. சில சமயங்களில், ஒருவருக்கு வரும் பந்தை, இன்னொருவர் வந்து எடுத்தாடி விடுவது உண்டு, அப்படி ஆடுவதானது, தன்னால் அந்தப் பந்தை நன்றாக ஆடமுடியும் என்ற நல்லுணர்வினால் தான் என்பதை இவர் உணர்ந்து கொண்டு, கோபப்படாமல் ஆடவேண்டும். இது போல், ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்துக்கொண்டு, குழுவின் சிறப்பான வெற்றிக்காகத் தியாக மனப்பாங்குடன் ஆடவேண்டும்.

சர்விஸ் போடுவதற்கு முன்னர், தனது குழுவினர் அனைவரும் ஆடுவதற்குத் தயாராக இருக்கின்றார்களா என்பதை ஒவ்வொரு ஆட்டக்காரரும் நன்கு கவனித்த பிறகே போடுகின்ற பயிற்சி முறையினைக் கொண்டிருக்க வேண்டும்.