பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

முன்னாட்டக்காரர் (Forward)

பின்னாட்டக்காரராக ஆடுபவர், ஆடுகளத்தின் அதிகமான பரப்பளவுள்ள இடங்களைக் காத்து விளையாடுபவராக இருந்தபோதிலும், முன்னாட்டக்காரர் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி, வலையோரப் பகுதிகளில் நின்றிருந்தபடி, வரும் பந்தினை அடித்து முடித்து வெற்றி எண் பெற்று விட்க்கூடிய ஆற்றல் உள்ளவராக விளங்க வேண்டும்:

ஆடுகின்ற முறை

1. முன்னாட்டக்காரர் நிற்கின்ற இடமானது வலையிலிருந்து சுமார் 6 அடிதுாரத்திற்கு அப்பாலிலிருந்து 12 அடி தூரத்திற்கு இடைப்பட்ட அளவில் இருக்க் வேண்டும். அப்பொழுதுதான், வலைக்கருகில் வந்து விழுகின்ற பந்தையும் (Drop) எளிதாக எடுத்தாட முடியும். அதே நேரத்தில், ஆடுகளத்தின் பிற்பகுதிகளையும் காத்து நின்றாட முடியும்.

2. தான் நிற்கின்ற பகுதியில், ஏதாவது ஒரு ஓரப் பகுதியைக் (One side காத்து நின்று ஆடுவதாக ஏற்பாடு செய்துகொண்டு ஆடவேண்டும். பொதுவாக முன்னாட்டக்காரர் தனது இடப்புறப் பகுதியை (Left Line) காத்து ஆடுவார். பின்னாட்டக்காரர் வலப்புறம் பகுதியைப் பார்த்து அதனைக் காத்துக்கொன் ஆடுவார்.

3. முன்னர் குறித்துக்காட்டியதுபோலவே தான் நின்று ஆடவேண்டும். ஆடித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேகமாக ஆடி பந்துப் பரிமாற்றம் இரு குழுக்களிடையே நடந்துகொண்டிருக்கும்பொழுது, எந்த பகுதி ஆளில்லாமல் காலி