பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


இடமாக விழுகின்றதோ, அந்த இடத்தைக் காத்துக் கொண்டு ஆடிடவேண்டும். அப்பொழுது 'இதைத் தான் செய்வேன். இங்கேதான் நிற்பேன். அது என் இடமல்ல, நான் ஏன் போய் எடுக்க வேண்டும் என்பது போல விவாதம் செய்வது விவேகம் ஆகாது. ஒருவருக்கொருவர் அனுசரித்து ஆடிட வேண்டும். அதை முன்னாட்டக்காரர் அவ்வப்போது கூறி செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.

4. வலைக்கருகில் பந்தை மெதுவாக விழச்செய்து (Drop) வெற்றி எண் பெறுவதில், எதிர்க் குழுவினர் கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள். அவர்கள் நோக்கமெல்லாம், வலைக்கருகில் பந்தைப் போட்டு விட்டால் பொதுவாக எடுத்துவிட முடியாது. அப்படி பந்தை எடுத்து விட்டாலும், சற்று உயரமாகத்தான் எதிர்குழுவிற்குப் போய்ச் சேரும், அப்பொழுது எளிதாக அடித்து முடித்துவிடலாம் என்பதுதான். அதற்கு இடங்கொடுக்காமல், வலைக்கருகே விழும் பந்தை சாமர்த்தியமாக எடுத்தாடிட எச்சரிக்கையுடன் இருப்பதுடன், சிறப்பாக அனுப்பிவிடும் பொறுப்பும் கடமையும் இவருக்கு உண்டு.

5. சர்விஸ் போடும்போது ஒரு சில அடிப்படை முறைகளை இவர் கையாளுவது நல்லதாகும். எந்த விதமான சர்விஸ் வேண்டுமானாலும் இவர் போடலாம். ஆனல், அது முன்னோட்டக்காரர் வசதியாக எடுத்தாடி விடக்கூடிய அளவில், அவருக்கு கைக்கு ஏதுவாகப் போவதுபோல் இருந்துவிடக் கூடாது. அதே சமயத்தில், முன்னாட்டக்காரரின் பின்னல் போடப்போகிறேன் என்று நடு ஆடுகளத்தில் (Mid court) சர்விஸ் போட்டு விடுவதும் கூடாது. அப்படி போட்டால், பின்னாட்