பக்கம்:பூமியின் புன்னகை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பூமியின் புன்னகைமறுபடி மலர்தல்

அந்திமகள் போர்த்த

ஆரிருளின் போர்வையிலே
வெந்து மனம் வாடி
விடிந்தவுடன் மலரானாய்
சந்ததமும் பூத்திருப்பாய்
சருகாகி மண் புகுந்தால்
மந்திரம் போல் மொட்டாவாய்
மறுபடியும் மலராவாய்!


நளினி

கருமேகம் சரியக்
குறுநிலவு வருவதுபோல்
கருநாகம் நெளியக்
கமலம் மலர் வதுபோல்
ஒரு காதில் சுரிகுழல்
ஒசிந்தாடத்
தெருவோரம் நடந்துவரும்
சிங்கார நளினி

காவியம்


கோல முகமதியிற் சிறுநாணக்
குங்குமப்பூச் சிவந்து
நீல விழிமலரிற் சிலகோடி
நெஞ்சி னுரை யுவந்து
கால மளந்திடும் சிறுபோதிற்
காவிய மனைத்தும் நீயாகி
ஜாலம் புரிகிற பேரழகே
சரித்திரமனைத்தும் நீதானே!