பக்கம்:பூமியின் புன்னகை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இன்னுமா எழுதுகிறீர் கவி?

கானல் நீர்தேடும் கலைமான்போல் படித்தவர்கள்,
நல்லவர்கள்
காய்ந்ததலைக் கெண்ணெய் தேடிக்
கூனல்முது கொடியத் தவிக்குங்கால் மற்றாங்கே
குதுகலமாய்க் கவிதைக்கும் கலைகளுக்கும்
நானே ராஜாவென் றரசியலின் செல்வாக்கால்
நாற்றிசையும் ஜால்ராக்கள் சூழ்ந்திடவே
வானம் பிளப்பதுபோல் துதிபாடி வருகின்ற
வக்கிரங்கள் பார்த்தபின்னும் கவிக்குலத்தின்
சேனைமறவன் செந்தமிழால் கவிசொன்ன சீராளன்
சுப்பிரமண்ய பாரதியும், அவன்வழியில்
தானொருவன் எனவந்த புதுச்சேரித்
தமிழ்க்கொண்டல்
ச. து. சு. யோகி கண்ணதாசன் இவரெல்லாம்
பேனாமுனையிற் பெறமுடியாப் பட்டங்கள் அத்தனையும்
பொய்யின் முனைதீட்டிப் பெற்றுவரும்