பக்கம்:பூமியின் புன்னகை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

45


ஒருநாள் வெய்யிலினில்
உலவவிட்டே ஒறுப்பதற்குச்
சூழ்வினைபோல் சித்திரையில்

திருநாள் பெயர் சொல்லி
வரவழைத்துத் தென்மதுரைக்
கோடையினை அறிவிப்பார்.

மறுநாள் மீனாட்சி
திருமணத்தில் மனமகிழ்ந்து
தாரைவார்ப்பார் கள்ளழகர்!

மேங்காட்டுப்பொட்டலொடு மற்றோர் பால்
மேனாள்கதை நிகழ்ந்த கோவலன் பொட்டல்

தீங்கோட்டும் வணிகர் அந்திக் கடைப் பொட்டல்
தீர்மானமாயிப் பொட்டல்கள் நிறைந்திருந்தும்

பாங்கோடு வளங்காட்டும் தமிழ்வையை
பழங்கோலம் பூண்டுவிட்ட புதுமண்டபம்.

நீங்காமல் பலர்வந்து கண்டிருக்கும்
நிலையான திருமலையார் அரண்மனைகள்.
 
சிம்மக்கல் தமுக்கம் திசைதிரும்பித்
திகைக்க வைத்த யானைக்கல்

மென்மக்கள் இசைபொழிந்து கலைவளர்க்கும்
மேலான சங்கீதவி நாயகர்தெரு

நன்மக்கள் பலர் நிறைந்து வாழ்கின்ற
நாலாவணி மாசிவீதி யிவையெல்லாம்