பக்கம்:பூமியின் புன்னகை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பூமியின் புன்னகை


பல்லோரும் பேசுவது சோஷலிஸம்
போடுவது பகல்வேஷம் தினவெளிச்சம்

உல்லாச மாளிகைகள் ஏர்க்கண்டிஷன்
உயர்வகுப்பிற் கோமான்போல் பயணங்கள்

சொல்லாமல் கொள்ளாமல் பழங்காலச்
சுகவாசி மன்னர்களை ஒழித்துவிட்டு

வல்லாண்மைத்திறத்தாலே இவரெல்லாம்
வாழ்கின்றார் புதுமன்னர் சுகவாழ்க்கை

எல்லார்க்கும் சமதர்மம் வரவேண்டி
இதயமெலாம் நெக்குருகும் மகாத்மாவே

கொல்லாமை சத்தியத்தைக் குறிக்கோளாய்க்
கொண்டிருந்தும் ஏன்பிறந்தீர் இந்நாட்டில்?

சொத்தாண்டு சுகம் ஆண்டு பதவிகளில்
சுவைவேண்டி மகிழ்ந்தறியாப் பெருமுனிவர்

பத்தாண்டுக்காலம்வரை மறதியினல்
பலவருமான வரிகட்டத் தவறிவிட்ட

முத்தான மந்திரிகள் மூத்திருக்கும்
மூளித் தனங்களினால் கறைபட்ட

இத்தேச நிலைமைகளை என்றேனும்
இழிதகைமை மாற்றிடக் கருதிவிட்ட

உத்தேசம் உமக்கிருந்தும் மகாத்மாவே
உதவிக்கு நன்றியில்லாச் சிறுநாட்டில்